Collection of details of students not enrolled in higher education உயர்கல்வியில் சேராத மாணவர் விபரம் சேகரிப்பு - துளிர்கல்வி

Latest

Sunday, 28 August 2022

Collection of details of students not enrolled in higher education உயர்கல்வியில் சேராத மாணவர் விபரம் சேகரிப்பு

பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர் விபரங்களை கணக்கெடுக்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து, பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிகளில் 'ஆன்லைன்' வழியில் உயர்கல்வி வழிகாட்டல் நடத்தப்பட்டது.கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த ஆண்டில் பல்வேறு வகை பட்டப் படிப்புகளில் சேர்ந்தனர். 

இந்நிலையில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை, பள்ளிகளுக்கு அழைத்து, அவர்களின் உயர்கல்வி குறித்த தகவல்களை பெற வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வியில் சேராத மாணவர்கள் யார், அவர்கள் தற்போது என்ன செய்கின்றனர் என்பதை அறிய வேண்டும். 

அவர்கள் மேல்படிப்பு படிக்காததன் காரணத்தை கேட்டு, அந்த விபரங்களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.மேலும், பட்டம் அல்லது டிப்ளமா படிப்பில் சேராத மாணவர்களை, உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டல்களை, பள்ளி ஆசிரியர்கள் வழங்குமாறு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தர விட்டுள்ளது.

Schools have been ordered to collect the details of students who have completed Plus 2 and are not enrolled in higher education.

 In the Tamil Nadu School Education Program, students who have completed Plus 2 in government schools and passed the public examination have been given higher education guidance in schools through 'online'. The students who completed Plus 2 in the last academic year have joined various degree courses this year.

In this case, the school education department has ordered the headmasters to invite the students who have completed Plus 2 in government schools to the schools and get information about their higher education. We need to know who the students who are not enrolled in higher education and what they are currently doing.

They have been instructed to ask the reason for not pursuing higher education and to record those details. Also, the School Education Commission has ordered the school teachers to provide guidelines for admission to higher education for students who are not enrolled in degree or diploma course.

No comments:

Post a Comment