தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை வரை, மிக கனமழை பெய்யும். நாளை கனமழை பெய்யும்.கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் ஓசூரில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. திருப்பத்துார், தாளவாடி, 9; கிருஷ்ணகிரியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும். 1ம் தேதி வரை, இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
In Tamil Nadu, it has been announced that very heavy rain will fall in three districts and heavy rain in 13 districts. Announcement issued by Chennai Meteorological Department: Due to the low atmospheric circulation prevailing over the interior parts of Tamil Nadu, Nilgiri, Kanyakumari and Tirunelveli districts will receive very heavy rain till today morning. Heavy rain will occur tomorrow. Coimbatore, Tirupur, Erode, Krishnagiri, Dharmapuri, Tirupattur, Salem, Namakkal, Kallakurichi, Dindigul, Theni, Tenkasi and Madurai districts will receive heavy rain today and tomorrow.
The sky is cloudy in Chennai. Moderate rain will occur in some areas. A maximum temperature of 34 degrees Celsius was recorded. As of yesterday morning, 10 cm of rain was recorded in Hosur in 24 hours. Tirupattur, Thalavadi, 9; 7 cm of rain has fallen in Krishnagiri. Cyclonic winds of up to 65 km/hr will be expected over Kumarikadal, Gulf of Mannar and coastal areas of South Tamil Nadu. Until the 1st, fishermen should not visit this area. It says so.
No comments:
Post a Comment