5G service from Oct 1: Prime Minister inaugurates அக்.,1 முதல் 5ஜி சேவை: பிரதமர் துவக்கி வைக்கிறார் - Thulirkalvi

Latest

Saturday, 24 September 2022

5G service from Oct 1: Prime Minister inaugurates அக்.,1 முதல் 5ஜி சேவை: பிரதமர் துவக்கி வைக்கிறார்

அக்.,1 ல் , இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். 

 கடந்த ஜூலை மாதம் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்து முடிந்தது. அதில், ஏர்டெல், ஜியோ, வோடோபோன், அதானியின் டேடா நெட்வொர்க்ஸ் நிறுவனங்கள் பங்கேற்றன. சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அளித்த பேட்டி ஒன்றில், அக்.,1 ல் 5ஜி சேவையை துவக்க இந்தியா தயாராகி வருகிறது. 

5ஜி பயணம் மிகச்சிறப்பானதாக இருக்கும். ஏராளமான நாடுகள் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கிடைக்கும் அளவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், குறுகிய காலத்தில் 80 சதவீதம் பேரை கவரும் வகையில் 5ஜி சேவைகள் துவக்கப்படும் எனக்கூறியிருந்தார். 

அதற்கு முன்னர், 5ஜி சேவைகள் துவக்குவதற்கு தயாராக இருக்கும்படி சேவை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்திருந்தார்.இந்நிலையில், மத்திய அரசின், தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்.1ல் டில்லியில் நடக்கும் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை துவக்கி வைக்க உள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது. 

5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Prime Minister Modi is going to launch 5G service in India on October 1.

 The auction for 5G services was completed last July. Airtel, Jio, Vodafone, Adani's data networks participated in it. In a recent interview given by Union Minister Ashwini Vaishnav, India is preparing to launch 5G service on October 1.

5G travel will be awesome. Many countries have 5G services available to 40 to 50 percent of the population. But he said that 5G services will be launched in a short time to attract 80 percent of people.

Before that, he had also instructed the service companies to be ready for the launch of 5G services. In this situation, in a statement issued by the National Broadband Initiative of the central government, it is said that the 5G service will be launched at the India Mobile Conference in Delhi on October 1 to take India's digital transmission and connectivity to new heights. .

After the introduction of 5G service, the central government has taken steps to make it available to all parts of the country within the next 2-3 years.

No comments:

Post a Comment