அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள்
இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம்.
அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது. ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும்.
அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும். இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும்.
சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும்.
No comments:
Post a Comment