எல்இடி விளக்கால் சர்க்கரை நோய் வருமா? Can LED light cause diabetes? - துளிர்கல்வி

Latest

Tuesday, 29 November 2022

எல்இடி விளக்கால் சர்க்கரை நோய் வருமா? Can LED light cause diabetes?

எல்இடி விளக்கால் சர்க்கரை நோய் வருமா? Can LED light cause diabetes?


எல்இடி விளக்கால் சர்க்கரை நோய் வருமா என்ற கேள்விக்கு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது ADVERTISEMENT Ads by சர்க்கரை நோய் இப்போது பல காரணங்களால் வரத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இவை அனைத்திற்கும் மறைமுகமாக நாமும் பொறுப்பாக இருக்கிறோம். சாலைகளில் நியான் விளக்குகள் கொண்ட விளம்பர பதாகைகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்களில் உள்ள லேசர் கற்றைகள், கட்டடங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள் போன்றவற்றின் மூலம் சர்க்கரை நோய் பன்மடங்காகப் அதிகரிக்கிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.

 ஆராய்ச்சியின் படி, இரவில் செயற்கை வெளிப்புற ஒளி (LAN) உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகளை எளிதில் பாதிக்கும். இது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக, சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற முக்கிய உறுப்புகளில் அழுத்தம் அதிகமாகி பல பிரச்சனைகள் தொடங்குகிறது. சீனாவின் ஷாங்காயில் உள்ள ஜியாடோங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் லேன் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்திற்கு இடையிலான பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். 

செயற்கையாக ஒளிரும் வான விளக்குகள் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. லேன் விளக்குகளால் அதிகம் பாதிக்கப்படும் ஒருவரின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடுகள் மாறுகின்றன. இதனால் தூங்குவதற்கும் காலையில் எழுந்திருக்கவும் உதவும் மெலடோனின் மற்றும் கார்டிகோஸ்டிரோன் ஆகியவை வேறுபாடாக வேலை செய்கிறது. இதன் விளைவாக, உடலில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கிறது. இரவில் நியான் அல்லது எல்இடி ஒளியை வெளிப்படுத்துவது குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அழகுக்காக எல்இடி விளக்கின் பிரகாசம் கூடுதலாகவே இருக்கும். 

இத்தகைய சூழலில் வாழ்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது எல்இடி விளக்குகளால் உடலுக்கு இரவு பகல் வித்தியாசம் தெரியாததால் பகலில் சுரக்கும் கார்டிசோல் இரவிலும் சுரக்கிறது. இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், பிரகாசமான ஒளிரும் எல்இடி விளக்குகளின் வெளிச்சம் அதிகமாக இருப்பதால், பிஎம்ஐ அதிகமாகும். உடல் சுறுசுறுப்பாக இருந்தாலும், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. நீரிழிவு ஆய்வுக்கான ஐரோப்பிய சங்கத்தின் இதழான டயபெடோலாஜியாவில் இந்த ஆய்வு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
Shocking information has been revealed in the study on the question of whether diabetes can be caused by LED lights. However, we are also indirectly responsible for all this. A new study suggests that diabetes is multiplied by neon-lit billboards on roads, laser beams in shopping malls, amusement parks, and LED lights in buildings.

 According to research, artificial outdoor light (LAN) at night can easily affect the functions of hormones in the body. It increases the risk of diabetes. Diabetes causes high blood sugar levels. Due to this, the pressure on the vital organs like kidney and heart increases and many problems start. Researchers from the Jiaotong University School of Medicine in Shanghai, China, have underlined the link between LAN and the risk of diabetes in their study.

A study found that artificially lit skylights increase the incidence of diabetes. Hormonal activity changes in the body of a person who is highly affected by lane lighting. Thus, melatonin and corticosterone work differently to help you fall asleep and wake up in the morning. As a result, the production of sugar in the body increases. Studies have shown that exposure to neon or LED light at night slows the metabolism of glucose. Especially in places like offices, shopping malls, the brightness of the LED lamp is extra for beauty.

The study revealed that people living in such an environment are 28 percent more likely to develop diabetes. That is, because the body does not know the difference between day and night due to LED lights, the cortisol that is secreted during the day is also secreted at night. Research suggests that this increases sugar levels.

What the study found was that the higher the exposure to bright LED lights, the higher the BMI. Despite being physically active, they are at risk of developing diabetes. The study was recently published in Diabetologia, the journal of the European Association for the Study of Diabetes.

No comments:

Post a Comment