ஆதார் இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : மின்வாரியம் எச்சரிக்கை Strict action will be taken if charging money for Aadhaar linking: Power Board warns
ஆதார் எண்ணை இணைக்க வரும் நுகர்வோரிடம், பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என,ஊழியர்களை மின்வாரியம் எச்சரித்துள்ளது. தமிழக மின் வாரியத்தில், நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடத்து வருகிறது.
இதற்காக, 2811 பிரிவு அலுவலகங்களில், டிச., 31 வரைசிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆதார் எண்ணை இணைக்க வருவோரிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊழியர்களை, மின் வாரியம் எச்சரித்துள்ளது இதுகுறித்து, மின் பகிர்மான இயக்குனர், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: ஆதார் எண் இணைக்க வரும் நுகர்வோரில், மாற்று திறனாளிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நுகர்வோருக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க ஷாமியானா பந்தல் அமைப்பதுடன், நாற்காலிகள் போட வேண்டும்.
ஆதார் குறித்து மக்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க, தனி அதிகாரியை கவுன்டரில் நியமிக்க வேண்டும் ஆதார் எண்ணை இணைக்க வருவோரிடம்பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால், மாற்று ஏற்படாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விபரங்களை, தினமும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
காலை, 10:30 மணி முதல் மாலை, 5:15 மணி வர கவுன்டர்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் செயற்பொறியாளர்கள் சிறப்பு கவுன்டர்களை தினமும் ஆய்வு செய்வதுடன், மண்டல தலைமை பொறியாளர்களும், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களும் தொடர்ந்துஆய்வ செய்வதுடன்,கண்காணிக்க வேண்டும்.
ஆதார் இணைப்பு தொடர்பாக விழிப்புணர்வ ஏற்படுத்தும்விளம்பர பதாகைகளை வைக்க வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
The power board has warned the employees that strict action will be taken if money is collected from the consumers who come to link the Aadhaar number. The Tamil Nadu Electricity Board is working on linking the Aadhaar number with the electricity connection number of the consumer.
For this, 31 special camps are being conducted in 2811 Divisional Offices on Dec. The electricity board has warned the employees that strict action will be taken if they collect money from those who come to connect Aadhaar number. In this regard, the circular sent by the director of electricity distribution to the district supervising engineers: Preference should be given to the differently abled and elderly among the consumers coming to connect the Aadhaar number. In addition to setting up a shamiana pavilion, chairs should be placed to avoid inconvenience to the consumers.
To answer the doubts raised by the people regarding Aadhaar, a separate officer should be appointed at the counter and strict action will be taken if the people are charged for linking the Aadhaar number. If a computer is damaged, replacement computers should be kept ready. Aadhaar linking details should be sent to head office daily.
Counters should be continuously operational from 10:30 AM to 5:15 PM Executive Engineers should inspect special counters daily and Zonal Chief Engineers and District Superintending Engineers should continuously inspect and monitor.
Banners should be put up to create awareness about Aadhaar linking. Thus it is stated.
No comments:
Post a Comment