தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு Chance of heavy rain in Tamil Nadu and Puducherry on 21st and 22nd - துளிர்கல்வி

Latest

Sunday, 18 December 2022

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு Chance of heavy rain in Tamil Nadu and Puducherry on 21st and 22nd

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு 

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (18.12.2022 முதல் 20.12.2022) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

(21.12.2022) அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

(22.12.2022) அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பணிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Chance of heavy rain in Tamil Nadu and Puducherry on 21st and 22nd

  A statement issued by the Chennai Meteorological Department has said:- Light to moderate rain with thunder and lightning may occur at isolated places in Tamil Nadu, Puduwai and Karaikal regions till today (18.12.2022 to 20.12.2022) due to variation in speed of easterly winds.

On (21.12.2022) Coastal districts of Tamil Nadu, Puduvai and Karaikal at many places and a couple of places in interior districts of Tamil Nadu are likely to experience light to moderate rain with thunder and lightning. Thoothukudi, Ramanathapuram, Sivagangai, Pudukottai, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai Cuddalore districts and Karaikal areas received heavy rain at one or two places.

On (22.12.2022) Coastal districts of Tamil Nadu, Puduvai and Karaikal at many places and a couple of places in interior Tamil Nadu with light to moderate rain with thunder and lightning. Ramanathapuram, Sivagangai, Pudukottai Thanjavur, Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Cuddalore, Villupuram, Chengalpattu districts, Puducherry and Karaikal are likely to receive heavy rain at one or two places.

The sky will remain partly cloudy for the next 48 hours for Chennai and suburban operations. Light rain may occur at isolated places in the city. The maximum temperature is around 30°C and the minimum temperature is around 24-25°C.

No comments:

Post a Comment