தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் 23 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.In Tamil Nadu, 23 lakh applications have been filed to add or delete votes from the voter list. - Thulirkalvi

Latest

Sunday, 11 December 2022

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் 23 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.In Tamil Nadu, 23 lakh applications have been filed to add or delete votes from the voter list.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும் 23 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

 வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக தோ்தல் பிரிவு அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பங்களை அளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம், டிச.8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ஒரு மாத காலத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளாா்.

 இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், நீக்கவும், உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் கடந்த நவம்பா் 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

 இந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் விண்ணப்பங்களை அளித்து வந்தனா். இதனிடையே, கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களின் வழியாகவும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் போன்றவற்றுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 23 லட்சம் விண்ணப்பங்கள்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக அவகாசம் அளிக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் மட்டும் 23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், பெயா் சோ்ப்பு மற்றும் ஒரு பேரவைத் தொகுதியிலிருந்து மற்றொரு பேரவைத் தொகுதிக்கு பெயரை மாற்ற வரையறுக்கப்பட்டுள்ள படிவம் எண்: 6 மட்டும், 10 லட்சத்து 34 ஆயிரத்து 18 படிவங்கள் வரை அளிக்கப்பட்டுள்ளன.

 வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ள ஒருவரின் பெயருக்கு ஆட்சேபம் தெரிவிக்கவும், நீக்கம் செய்யக் கோரவும் விண்ணப்பப் படிவம் எண்: 7 வகை செய்கிறது. இந்த வகையில், 7 லட்சத்து 90 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் வரை அளிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, வாக்காளா் பட்டியலில் உரிய திருத்தங்கள் கோரி 4 லட்சத்து 78 ஆயிரத்து 726 வாக்காளா்கள் மனுக்களை அளித்துள்ளனா். 

மேலும், அயல்நாடுகளில் வசிக்கக் கூடிய தமிழா்களில் 11 போ் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனா். மொத்தமாக 23 லட்சத்து 3 ஆயிரத்து 310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல்: கடந்த ஒரு மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் டிசம்பா் 26-ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்படும். 

இதைத் தொடா்ந்து, இறுதி வாக்காளா் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் ஈடுபடுவா். தமிழகம் முழுவதும் ஜனவரி 5-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும், இளம் வாக்காளா்களாக தங்களை பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளவா்களுக்கு தேசிய வாக்காளா் தினமான ஜன.25-ஆம் தேதியில் இருந்து அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கும் என்று அதில் தெரிவித்துள்ளாா் சத்யபிரத சாகு.

The period given to submit applications directly in the Dothal division offices for removal of Bei Soppu from the electoral list ended on December 8. Following this, Chief Returning Officer Satyapratha Saku has released the details of the number of applications filed for erasure and removal of names from the voter list within a month.

  A press release issued by him in this regard: The draft list of voters was published on November 9 to add, delete and make appropriate amendments to the list of voters in Tamil Nadu. Following this, the Electoral Commission had announced that applications can be made to add, delete and amend names in the voter list.

  According to this notification, the public has been submitting applications. Meanwhile, special camps were conducted for four days only in the last month of November. Through these camps, applications were also received for pey soppu, deletion etc. in the voter list. A total of 23 lakh applications: 23 lakh applications were received in the one month period that was given for the removal of Bey Soppu in the Vakal list. In this, 10 lakh 34 thousand 18 forms have been provided, only Form No: 6 which is limited to Bei Soppu and name change from one Assembly Constituency to another Assembly Constituency.

  Application Form No: 7 category for objecting to the name of a person appearing in the electoral roll and seeking deletion. In this category, up to 7 lakh 90 thousand 555 applications have been submitted. Similarly, 4 lakh 78 thousand 726 voters have submitted petitions seeking appropriate amendments in the voter list.

Also, 11 out of the Tamils living in foreign countries have applied for their names to be included in the voter list. A total of 23 lakh 3 thousand 310 applications have been received. Final Voter List: All applications received during the last one month will be considered and finalized by December 26.

Following this, the Returning Officers will be involved in preparing the final voter list. The final voter list will be published on January 5 across Tamil Nadu. Moreover, Satyapratha Sahu said that the work of issuing identity cards to those who have joined the list as young voters will start from Jan. 25, the National Voter's Day.

No comments:

Post a Comment