தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
நேற்று டிச.26 குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(டிச.27) வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக,
இன்று முதல் டிச.30 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
படிக்க: மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் விலைப்பட்டியல் அறிவிப்பு!
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு
டிச.27: கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
According to Meteorological Department, moderate rain will continue in Tamil Nadu from today for four days. According to the information released by the Meteorological Center, the low pressure area that existed in the Kumari Sea and adjacent areas yesterday (December 27) has weakened. Also there is low atmospheric circulation in the Kumari Sea and adjoining areas.
Due to this, light to moderate rain with thunder and lightning may occur at one or two places over Tamil Nadu, Puduwai and Karaikal from today till Dec 30. The weather forecast for Chennai and its suburbs is partly cloudy for the next 48 hours.
Light to moderate rain accompanied by thunder and lightning may occur at a few places in the city. Read: Notification of cost of nasal anti-coronavirus medicine! The maximum temperature will be around 31 degree Celsius and the minimum temperature will be around 24 degree Celsius.
For Fishermen Dec 27: Cyclonic winds of 40 to 50 kmph with occasional gusts of 60 kmph are likely over Kerala coast, Southeast Arabian Sea, Lakshadweep and adjoining Kumari Sea. Fishermen are advised not to go to sea on the above mentioned days.
No comments:
Post a Comment