தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு Chance of rain in 6 districts of Tamil Nadu - Thulirkalvi

Latest

Friday, 2 December 2022

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு Chance of rain in 6 districts of Tamil Nadu

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு Chance of rain in 6 districts of Tamil Nadu 

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேர்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ம் தேதியை ஒட்டி தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என தெரிவித்திருந்தது.

 மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

A low pressure area is likely to form over South East Bay of Bengal and adjoining South Andaman Sea on December 5. It will move in west-northwest direction during next 48 hours and may intensify as a depression over Southeast Bay of Bengal. Then it will move further in the west-northwest direction and may prevail near the coastal areas of Tamil Nadu-Pudu around December 8.

 Also, light to moderate rain with thunder and lightning was reported at a few places in Tamil Nadu, Puduwai and Karaikal regions and a couple of places in interior Tamil Nadu districts due to variation in speed of easterly winds. In this case, the Chennai Meteorological Center has informed that there is a chance of thundershowers in 6 districts of Tamil Nadu in the next 3 hours.

 According to the Chennai Meteorological Department, there is a possibility of light to moderate rain with thunder and lightning in 6 districts namely Tirunelveli, Kanyakumari, Thoothukudi, Ramanathapuram, Nagapattinam and Mayiladuthurai in the next 3 hours.

No comments:

Post a Comment