தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் (24-12-2022) காலை 05:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக, 24.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.12.2022: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை 24.12.2022, 25.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
26.12.2022: தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
. 27.12.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chance of heavy rain tomorrow in 8 districts of Tamil Nadu
A statement issued by the Chennai Meteorological Department has said:- The low pressure zone (24-12-2022) over the South-West Bay of Bengal is located about 510 kilometers east of Nagapattinam at 05:30 am.
It is likely to move slowly west-southwestward over Sri Lanka towards the Kumari Sea region during the next 48 hours. Due to this, 24.12.2022: Light to moderate rain may occur at a few places in Puduwai and Karaikal areas of Tamil Nadu coastal districts and a couple of places in interior Tamil Nadu districts.
25.12.2022: Light to moderate rain with thundershower at many places over Puduwai and Karaikal coastal districts of Tamil Nadu and at a couple of places in interior Tamil Nadu districts. Thoothukudi, Ramanathapuram, Sivagangai, Pudukottai, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai and Karaikal districts received heavy rain at one or two places.
26.12.2022: Light to moderate rain with thunder and lightning may occur at many places in South Tamil Nadu districts and a few places in Puduwai and Karaikal areas of North Tamil Nadu districts. Kanyakumari, Tirunelveli Thoothukudi, Ramanathapuram, Theni, Thenkasi, Virudhunagar, Sivagangai, Pudukottai, Thanjavur, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai districts and Karaikal areas received heavy rain.
27.12.2022: Light to moderate rain at a couple of places over Tamil Nadu, Puduwai and Karaikal. Fisherman's Warning 24.12.2022, 25.12.2022: Cyclonic winds of 45 to 55 kmph with occasional gusts of 65 kmph are likely to occur over South West Bay of Bengal and adjacent Sri Lankan coastal areas, Tamil Nadu coastal areas, Kumari Sea areas and Gulf of Mannar.
26.12.2022: Cyclonic winds of 40 to 50 kmph with occasional gusts of 60 kmph are likely to occur over coastal areas of Tamil Nadu, Kumari Sea and Gulf of Mannar.
. 27.12.2022: Cyclonic winds with a speed of 40 to 50 km/h with occasional gusts of 60 km/h may occur over Kumari Sea, Kerala coast and adjoining Southeast Arabian Sea, Lakshadweep areas. Fishermen are advised not to go to these areas on the above days. This is stated in it.
No comments:
Post a Comment