சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் திறக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அங்கு அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்தது.இதனையடுத்து அந்த பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதையை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு (இன்று) மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பயன்பாட்டிற்கு வரும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
According to the Corporation, the special lane for disabled people in Chennai Marina will be opened after the end of the monsoon season.
Due to storm Mandus that formed in the Bay of Bengal last week, the special path for disabled people was damaged due to the rough sea at Chennai Marina beach. After this, Minister KN Nehru said that the path will soon be repaired and put into use. Meanwhile, the work of repairing the special road for disabled people damaged by the storm started yesterday.
The Corporation informed that these works will be completed (today) and the special lane for the differently abled will be used again. In this case, the Chennai Municipal Corporation has informed that the special path for disabled people at the Chennai Marina beach will be opened only after the end of the monsoon season.
Also, the length of the special route will be slightly reduced by calculating the distance of the incoming sea wave, and the viewing platform will be renovated after the end of the monsoon season, the Chennai Corporation said.
மேலும் கடல் அலை உள்வரும் தூரம் கணக்கிட்டு சிறப்பு பாதையின் நீளம் சற்று குறைக்கப்படவுள்ளதாகவும், மழக்காலம் முடிந்த பிறகு பார்வையிடும் தளம் சீரமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment