எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி தேர்வு
மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறினார். வினாத்தாள் பயிற்சி தேர்வு இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி.
பயிலும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் தினமும் காலை 11 மணி மற்றும் மாலை 7 மணிக்கு ஒரு மதிப்பெண் வினாத்தாள் பயிற்சி தேர்வு செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைெபற உள்ளது.
இதற்குரிய லிங்க் தேர்வு நடைபெறும் நாட்களில் தலைமை ஆசிரியர் வாட்ஸ்அப் குரூப்பில் பகிரப்படும். எனவே இந்த செயலியை பயன்படுத்தி வினாத்தாளை பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு அட்டவணை பொறுப்பாசிரியர்கள் பகிரப்பட்ட இணைப்பை மாணவர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆகையால் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதல்வர்களும் தங்கள் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் மாணவ- மாணவிகள் அனைவரையும் தவறாது மேற்கண்ட பயிற்சி தேர்வுகளை எழுத ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
24-ந் தேதி காலை தமிழ் தேர்வு, மாலை ஆங்கில தேர்வு நடத்தப்பட்டது.
26-ந் தேதி காலை கணிதமும், மாலை அறிவியல் தேர்வும், 27-ந் தேதி காலை சமூக அறிவியலும், மாலை தமிழ் தேர்வும், 28-ந் தேதி காலை ஆங்கிலமும், மாலை கணிதமும் நடக்கிறது.
29-ந் தேதி காலை அறிவியலும், மாலை சமூக அறிவியலும், 30-ந் தேதி காலை தமிழும், மாலை ஆங்கிலமும், 31-ந் தேதி காலை கணிதமும், மாலை அறிவியலும், ஜனவரி 1-ந் தேதி மாலை சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
SSLC Online practice test for students
SSLC in Rudunagar Virudhunagar District District Principal Education Officer Gnanakauri said that a special examination is conducted for the students to pass 100 percent in the general examination. Question paper practice test He further said:-
SSLC is conducted in all government and government aided schools in Virudhunagar district. In order to get 100 percent pass in the government public examination, the students are going to take one mark question paper practice test online through the following schedule every day on the half-year exam holidays at 11 am and 7 pm.
The link for this will be shared on the Principal WhatsApp group on the exam days.
So head teachers are requested to download the question paper using this app and keep it ready. Exam schedule in-charges are requested to share the shared link in the student's WhatsApp group. Therefore all types of school headmasters and principals have SSLC in their school.
All the students are requested to be instructed by the teachers to write the above practice tests without fail. On 24th, the Tamil exam was conducted in the morning and the English exam in the evening.
On 26th there will be Maths in the morning and Science in the evening, Social Science in the morning on 27th and Tamil in the evening,
English in the morning and Maths in the evening on 28th. Science in the morning and Social Science in the evening on 29th, Tamil in the morning and English in the evening on the 30th, Mathematics in the morning and Science in the evening on the 31st, Social Science in the evening on 1st January. This is what he said.
No comments:
Post a Comment