தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புChance of heavy rain in Tamil Nadu today - துளிர்கல்வி

Latest

Saturday, 3 December 2022

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புChance of heavy rain in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புChance of heavy rain in Tamil Nadu today


 தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.

 பிறகு மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ந்தேதி வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அருகில் நிலவக்கூடும்.

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 03-12-2022:- தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், வடக்கு உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓஅரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
A low pressure area is likely to form over Southeast Bay of Bengal and adjoining South Andaman Sea on December 5. It will move in west-northwest direction during next 48 hours and may intensify as a depression over South East Bay of Bengal.

  Later, it will move in west-northwest direction and may prevail over North-East, Puduvai and adjoining South Andhra coastal areas on December 8.

  03-12-2022:- Light to moderate rain with thunder and lightning is likely to occur at many places in South Tamil Nadu, a few places in North Tamil Nadu coastal districts, Puduwai and Karaikal areas and a couple of places in North Central Tamil Nadu due to variation in speed of easterly wind.

  Thoothukudi, Ramanathapuram, Sivagangai, Pudukottai, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai and Karaikal districts are likely to receive heavy rain at one or two places. As for Chennai, the sky will be partly cloudy for the next two days. Light/moderate rain with thundershower at isolated places is expected at a few places.

No comments:

Post a Comment