இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு Chance of heavy rain today - Thulirkalvi

Latest

Monday, 5 December 2022

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு Chance of heavy rain today

இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை 16 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச.5) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடுய நிலை உள்ளது.

 இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பின்னா், மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து டிச.8-ஆம் தேதி வட தமிழகம், புதுவை, அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும். 

 குமரிக் கடல் பகுதிகளிலிருந்து வடகேரளம் வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

According to the Chennai Meteorological Department, there is a possibility of heavy rain in 16 districts of Tamil Nadu on Monday. In this regard, the Meteorological Department issued a press release: A low pressure area is likely to form on Monday (Dec. 5) in the Southeast Sea of Bengal and adjacent South Andaman Sea areas.

  It is likely to move west-northwestward and strengthen as a depression over Southeast Bay of Bengal during the next 48 hours. Later, it may move towards West-Northwest direction and move towards North Tamil Nadu, Puduvai and adjoining South Andhra Pradesh on December 8th.

  Light to moderate rain with thunder and lightning may occur at a few places over Tamil Nadu, Puducherry and Karaikal due to the low circulation in the tropical cyclone from Kumarik Sea to North Kerala. Mayiladuthurai, Thanjavur, Thiruvarur, Nagai, Pudukottai, Sivagangai, Ramanathapuram, Madurai, Theni, Dindigul, Tirupur, Virudhunagar, Thenkasi, Thoothukudi, Nellai, Kanyakumari districts and Karaikal areas are expected to receive heavy rain.

No comments:

Post a Comment