பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் Chief Minister M.K.Stalin launched 'Manam' program to protect mental health of school and college students - துளிர்கல்வி

Latest

Thursday, 22 December 2022

பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் Chief Minister M.K.Stalin launched 'Manam' program to protect mental health of school and college students

பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டத்தை தொடங்கி வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

 தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மனநல நல் ஆதரவு மன்றங்கள் அமைத்து, பள்ளி மாணவர்களின் மன நலம் காக்கும் 'மனம்' திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 முதற்கட்டமாக 'மனம்' திட்டம் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, ரூ.22.84 கோடி ரூபாய் மதிப்பில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி வைக்கும் விழா ஆகியவை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு மனம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மனம் திட்டம் அடுத்தகட்டமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக விழாவின் போது அறிவிக்கப்பட்டது

75 புதிய ஆம்புலன்ஸ் வாகனம் இதைத்தொடர்ந்து, 75 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பட்டுக்காக மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இயக்கி வைத்தார். புதிய 108 ஆம்புலன்சை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 14 அறைகளுடன் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை அவர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மனநலம் மற்றும் நரம்புசார் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மையத்தினை உருவாக்க முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கான முப்பரிமான வரைபடத்தை வெளியிட்டார். மனநலத்தை வலுப்படுத்தும் மனம் திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக தமிழகம் முழுவதும் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

 மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டுக்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்ட பயிற்றுனர் பயிற்சி கையேடு ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட மத்திய அரசின் விருதை தேசிய நலவாழ்வுக் குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், சுகமான மகப்பேறு நிலையங்களை தேர்ந்தெடுப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு 2-ம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட மத்திய அரசின் விருதை மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குனர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

 இதன்பின்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக பயன்பாட்டுக்காக 3 மின்சார சைக்கிள்களை தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.ரமேஷ் சுப்பிரமணியன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசு மனநல காப்பக இயக்குனரிடம் வழங்கினார். 

கலந்து கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, எம்.எல்.ஏ.க்கள் அ.வெற்றியழகன், தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் எஸ்.உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் டாக்டர் வி.பி.ஹரி சுந்தரி, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஆர். சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Chief Minister M.K.Stalin launched 'Manam' program to protect mental health of school and college students

  The Government of Tamil Nadu has announced that it will set up mental health support forums in schools and colleges and start the 'Manam' program to protect the mental health of school students. A 'Manam' helpline number 14416 has been introduced in all medical colleges so that students who need psychological counseling can contact a psychiatrist immediately without hesitation.

  In the first phase 'Manam' project has been started in 36 Government Medical Colleges in Tamil Nadu. The inaugural ceremony, commissioning ceremony of 108 ambulance vehicles with 75 new improved modern medical equipments at a cost of Rs.22.84 crores was held yesterday at Kilpakkam Government Mental Hospital, Chennai. Chief Minister M. K. Stalin attended the function and inaugurated the Manam project. It was announced during the ceremony that Manam Project will be expanded to all schools and colleges in the next phase

75 New Ambulance Vehicles Following this, M.K. Stalin flagged off 75 new 108 ambulance vehicles for public use. He visited the new 108 ambulance and asked the officials about its facilities. Later, he inaugurated a 14-room intermediate care center at a cost of Rs 2.36 crore at the Chennai Government Mental Health Asylum. Following this, he released a three-dimensional plan for the building to be upgraded and constructed at a cost of Rs 40 crore in the first phase to create a state-level Tamil Nadu Institute of Psychiatry and Neurology, a reference center for providing mental health and neuro-medical services. Government Medical College students from all over Tamil Nadu expressed their gratitude to Chief Minister M.K.Stalin through a video for launching the Manam program to strengthen mental health.

  Congratulation to M.K.Stalin Following this, M.K.Stalin released the teacher's manual for the mental development of school students and the teacher's training manual for the National Adolescent Welfare Program. National Health Group Director Shilpa Prabhakar Satish congratulated the central government on the award given to Tamil Nadu for being the first country in identifying and treating pregnant mothers with obstetric complications. Also, the Director of Medical Education, Director of Medical and Rural Welfare, Director of Public Health and Immunization congratulated the central government award given to Tamil Nadu for being 2nd in the national level for good performance in selection of safe maternity centers.

  After this, S.Ramesh Subramanian, Managing Director of the private company, handed over 3 electric bicycles to the Director of Government Mental Care in the presence of Chief Minister M.K.Stal for the use of Kilpakkam Government Mental Health Care, Chennai.

Ministers S. Raghupathi, M. Subramanian, P.K. Shekhar Babu, Mayor R. Priya, MLAs A. Vetiyazhagan, Thayakam Kavi, Principal Secretary, Department of Medicine and Public Welfare Dr. Senthilkumar, Director National Welfare Group Shilpa Prabhakar Satish, Director Tamil Nadu Health Program Dr. S. Uma, Director Public Health and Preventive Medicine Dr. T.S. Selvavinayagam, Director of Medical and Rural Health Services, Dr. VP Hari Sundari, Director of Medical Education, Dr. R. Santhimalar and senior government officials were present.

No comments:

Post a Comment