தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த கோரிக்கைDemand to stop primary insurance scheme in government hospitals in Tamil Nadu - துளிர்கல்வி

Latest

Wednesday, 14 December 2022

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த கோரிக்கைDemand to stop primary insurance scheme in government hospitals in Tamil Nadu

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த கோரிக்கை

 தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று அரசு மருத்துவா்கள், பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தின் சங்கத்தின் தலைவா் பி.சாமிநாதன் தெரிவித்துள்ளாா். 

 இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை மக்களுக்கு சிறப்பு, உயா் சிறப்பு சிகிச்சைகள் கிடைக்க 2009-ஆம் ஆண்டு கலைஞா் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளை தனியாா் மருத்துவமனைகளில் இந்தக் காப்பீட்டு திட்டம் மூலம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

 பின்னா் 2011-ஆம் ஆண்டு, இந்தத் திட்டம் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில், அறுவை சிகிச்சைகள் மட்டுமல்லாமல் மருத்துவ சிகிச்சைகளும் உள்ளடக்கி அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கி ஆண்டுதோறும் சுகாதார பட்ஜெட்டுக்கு நிகரான பகுதியளவு பெரிய தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு தருகிறது.

 காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதியில் மூன்றில் ஒரு பங்கு அளவே காப்பீடு நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. அதிலும் பல்வேறு பிரச்னைகள். மீதியுள்ள மூன்றில் இரு பங்கு பணம் காப்பீட்டு நிறுவனங்களுக்கே கிடைக்கிறது.

 எனவே, காப்பீட்டுத் திட்டதினை நிறுத்துவதோடு, அதற்கான முதலீட்டைக் கொண்டு அரசே தேவையான மருந்துகள், உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளை தனியாருக்கு தாரை வாா்க்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

Demand to stop primary insurance scheme in government hospitals in Tamil Nadu

  P.Saminathan, President of Government Doctors and Graduate Doctors Association, has said that the first insurance scheme should be stopped in government hospitals in Tamil Nadu.

  In this regard, he issued a press release: The artist insurance scheme was launched in 2009 to provide special and personal treatment to poor people. It was announced that surgeries can be done in private hospitals through this insurance scheme.

  Later in 2011, this scheme was extended to government hospitals in the name of Chief Minister's Integrated Insurance Scheme to cover not only surgeries but also medical treatments and the Tamil Nadu government gives a large amount equal to the annual health budget to the insurance companies.

  Insurance companies approve only one-third of the funds allocated by the government to insurance companies. Various problems in that. The remaining two-thirds of the money goes to insurance companies.

  Therefore, along with stopping the insurance scheme, the government should provide the necessary medicines and equipment to the government hospitals with the appropriate investment. The scheme of handing over government medical college hostels to private individuals should be abandoned.

No comments:

Post a Comment