தஞ்சை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு
மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது.
இலவச பயிற்சி வகுப்பு
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் இளநிலை செயலக உதவியாளர், பிரிவு எழுத்தர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 4500 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலை படிப்பு தரம் தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்தேர்விற்கான வயது வரம்பு 18 வயது முதல் 27 வயது வரை ஆகும். இந்த தேர்விற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இன்று நடக்கிறது தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவலர் தேர்விற்கும் மற்றும் மேல்நிலை படிப்பு தரம் தேர்விற்கும் சேர்த்து, இலவச பயிற்சி வகுப்பு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30மணிக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
மேலும் இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை தேர்விற்கான பாடத்திட்டம், தேர்விற்கு தயார்செய்யும் விதம் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு மற்றும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
பதிவு செய்ய வேண்டும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அலுவலக தொலைப்பேசி 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Thanjavur Central Govt. Vacancies announced free coaching class starts today at Thanjavur District Employment Office. Free Training Course Tanjore District Collector Dinesh Ponraj Oliver has said in a press release that:- Free training courses are being conducted for various Central and State Government announced vacancies through the voluntary learning circle operating in Tanjore District Employment and Vocational Guidance Center.
Currently, the Central Staff Selection Board has released a notification for the Combined Higher Education Grade Examination for 4500 vacancies including Junior Secretarial Assistant, Section Clerk, Data Entry Operator. The educational qualification for this should be 12th class pass. Age limit for this exam is 18 years to 27 years.
Apply for this exam by 4th of next month (January) at ssc.nic.in. Today, a free training course is being conducted today (Thursday) at 10.30 am in this office along with the constable examination and higher education standard examination announced by the Central Staff Selection Board through the voluntary study circle of Tanjore District Employment and Vocational Guidance Centre.
In addition, special guests will participate in this training course, the syllabus for the exam, how to prepare for the exam, explanation class and training classes will be held regularly.
Registration is required Youngsters from Tanjore district who are preparing for the competitive examination can register their name by mentioning their name and educational qualification on WhatsApp number 8110919990. Also contact office phone number 04362-237037. It says so.
No comments:
Post a Comment