மின்சார உயிர் இழப்புகளை தடுக்க தமிழ்நாடு மின்சார ஆணையம் அதிரடி செயல் Tamil Nadu Electricity Authority takes action to prevent loss of life in electricity
வீடு, கடை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் நுகர்வோர்கள் ஆர்சிடி கருவி பொருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மின்கசிவினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஆர்.சி.டி எனப்படும், ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள மின்சார வாரியம்,ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைத்து வகையான மின் நுகர்வோர்களும் இதை பொருத்த வேண்டும் என்றும்,உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
The Tamil Nadu Electricity Regulatory Commission has urged electricity consumers to install RCD devices at homes, shops and educational institutions. To prevent human casualties due to electric leakage, the Tamilnadu Electricity Regulatory Authority has made it mandatory to install a life-saving device called residual current device (RCD) in the electrical connection.
The Electricity Board has said that this step has been taken to prevent accidents during rainy season and said that precious lives will be saved by installing RCD at a cost of thousands. The Tamil Nadu Electricity Regulatory Commission has urged all types of electricity consumers to install this at home, shop, industry, educational institutions, and to avoid accidents by installing RCD devices, which are the basic necessity of life safety.
No comments:
Post a Comment