வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The Chennai Meteorological Center has informed that the Northeast Monsoon will withdraw on January 12. - துளிர்கல்வி

Latest

Tuesday, 10 January 2023

வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The Chennai Meteorological Center has informed that the Northeast Monsoon will withdraw on January 12.

வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை ஜன.12-ல் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடக மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. 10.01.2013 மற்றும் 11.01.2013: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

 உள் மாவட்டங்களில் குறைந்தபடச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 12.01.2023 முதல் 14.01.2023: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை 10.01.2023: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்.

The Chennai Meteorological Center has informed that the Northeast Monsoon will withdraw on January 12.

Northeast Monsoon is likely to withdraw over Tamil Nadu, Puduwai, Karaikal, adjoining Coastal Andhra Pradesh, Rayalaseema, South Interior Karnataka and Kerala on January 12. 10.01.2013 and 11.01.2013: Tamil Nadu, Puduwai, Karaikal may experience dry weather. Light fog is likely at a few places in the morning.

  Minimum temperature in interior districts is likely to be 2 to 3 Celsius below normal. 12.01.2023 to 14.01.2023: Tamil Nadu, Puduwai, Karaikal may experience dry weather. The weather forecast for Chennai and its suburbs is partly cloudy for the next 48 hours. The maximum temperature will be around 29-30 degree Celsius and the minimum temperature will be around 21 degree Celsius.

Light fog will be seen in the morning. Fisherman's Warning 10.01.2023: Fishermen are advised not to venture to the Gulf of Mannar and Kumari Sea areas as strong winds from the east may blow at a speed of 45 to 55 kmph.

No comments:

Post a Comment