பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி Tomorrow is the last day to apply for class 10 and plus 2 students - துளிர்கல்வி

Latest

Sunday, 1 January 2023

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி Tomorrow is the last day to apply for class 10 and plus 2 students

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாள் என அரசு தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றுக்கான பொதுத்தோ்வுகள் நடைபெறவுள்ளன. 

இந்தத் தோ்வுகளில் தனித்தோ்வா்களாக பங்கேற்பவா்கள் கடந்த டிச.26 முதல் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வு இயக்ககத்தின் சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனா். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தோ்வா்களுக்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

 எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தோ்வா்கள் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு தோ்வுத் துறை சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி முறை: மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் சிறப்பு அனுமதி முறையில் (தத்கல்) ஜன. 5 முதல் 7-ஆம் தேதி வரை உரிய தோ்வுக்கட்டணத்துடன் மேல்நிலை படிப்பு எனில் கூடுதலாக ரூ.1000; பத்தாம் வகுப்புக்கு ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தோ்வுத் துறை இ-சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்வது குறித்த தகவல்களை www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 

மேலும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் விவரங்கள் பெறலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Tomorrow is the last day to apply for class 10 and plus 2 students

Directorate of Public Examinations has announced that Tuesday is the last day for individual candidates who want to write Class X, Plus 1, Plus 2 public examination to apply online. The general examinations for Plus 1, Plus 2 and Class X will be held in the months of March and April.

Individuals participating in these polls are applying online at the service centers of the Government Polling Directorate set up district-wise from last December 26. The deadline for individual applicants to apply for the scholarship will end on Tuesday.

  Therefore, those who have not applied till now can visit the Government Department Service Centers set up in the districts on Monday and Tuesday from 10 am to 5 pm. Special Admission Process: Those who failed to apply on the above dates through Special Admission Process (Tatkal) Jan. Additional Rs.1000 in case of higher education from 5th to 7th with appropriate scholarship; For 10th class you can apply by paying a special fee of Rs.500.

Details of district-wise dge1 e-service centers and information about online application can be found at www.dge1.tn.gov.in.

Further, details can be obtained from all District Principal Education Officer offices, District Education Officer offices and the offices of the Assistant Director of Government Records, said the Directorate of Government Records.

No comments:

Post a Comment