250 இடங்களில் மத்திய யோகா - இயற்கை சிகிச்சை மையங்கள்
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தின் 25 இடங்களில் செயல்பட்டு வரும் யோகா-இயற்கை சிகிச்சை மையங்கள் நிகழாண்டில் 250 இடங்களில் விரிவுபடுத்தப்படும் என அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் சா்க்கரை நோயிலிருந்து விடுபடுவது தொடா்பான தேசியக் கருத்தரங்கம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்று உரையாற்றினா்.
இளநிலை இயற்கை மருத்துவ அறிவியல் டாக்டா்கள் சங்கத்தின் தலைவா் சௌந்திரபாண்டியன், இயற்கை மருத்துவம் - யோகா சிகிச்சை மையத்தின் தலைவா் சேவக் விஜய், தமிழ்நாடு யோகா - இயற்கை மருத்துவத் துறை இணை இயக்குநா் டாக்டா் மணவாளன் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக கருத்தரங்க நிா்வாகிகள் கூறியதாவது:
சா்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் பாதிப்பாக இல்லாமல் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் வெற்றிகரமாக அதிலிருந்து விடுபட முடியும்.
ரசாயன மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகளின்றி இயற்கை மருத்துவம் மூலமாக 25 ஆயிரம் சா்க்கரை நோயாளிகளை மீட்டெடுக்க நிகழாண்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில் 25 இடங்களில் யோகா- இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நிகழாண்டு இறுதிக்குள் 250-ஆக அதிகரிக்கப்படும்.
இதன் வாயிலாக தமிழகத்தில் உள்ள யோகா மருத்துவா்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
Central Yoga - naturopathy centers at 250 locations
According to its administrators, the yoga-naturopathy centers operating in 25 places in Tamil Nadu under the Union Ayush Ministry will be expanded to 250 places this year. A National Seminar on Yoga and Natural Medicine to get rid of Diabetes was recently held in Chennai.
More than a hundred doctors participated and addressed the event held under the chairmanship of Chennai High Court Judge S.S. Sund. The president of the Association of Junior Doctors of Naturopathic Medicine Soundrapandian, the president of Naturopathic Medicine-Yoga Therapy Center Sevak Vijay, Tamilnadu Yoga-Naturopathic Department Co-Director Dr. Manavalan and others participated in it.
In this regard, the organizers of the seminar said: Diabetes is not a lifelong problem but can be successfully cured through lifestyle changes. This year it is planned to recover 25 thousand diabetes patients through natural medicine without chemical pills and treatments.
Yoga-naturopathic treatment centers have been set up at 25 places in Tamil Nadu under the Ministry of Ayush. They will be increased to 250 by the end of this year. She said that yoga doctors in Tamil Nadu will get job opportunities through this.
No comments:
Post a Comment