அடா் பனி மூட்டம் - தில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! Ad snow fog - red alert for 5 states including Delhi! - துளிர்கல்வி

Latest

Sunday, 8 January 2023

அடா் பனி மூட்டம் - தில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! Ad snow fog - red alert for 5 states including Delhi!

அடா் பனி மூட்டம் - தில்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அடர் பனி மூட்டம் காரணமாக தில்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் அடர் மூடுபனி மற்றும் குளிர் அலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை, விமான சேவை, ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

 வடமேற்கு இந்தியாவையும் அதை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளையும் அடா்ந்த மூடுபனி சூழ்ந்ததால், சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி உள்பட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருந்தது. அடா்த்தியான மூடுபனி, குளிா் நாள் மற்றும் குளிா் அலை நிலைமைகள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளது. இருப்பினும், மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக ஓரிரு நாள்களுக்குப் பிறகு சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று ஐஎம்டி தெரிவித்திருந்தது.

 பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு சிவப்பு எச்தசரிக்கையும், பிகார் மற்றும் ராஜஸ்தானுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தில்லியின் உச்ச குளிா்கால மின் தேவை கடந்த வெள்ளிக்கிழமை 5,526 மெகாவாட்டாக உயா்ந்தது. சில இடங்களில் விவசாயம், கால்நடைகள், நீா் வழங்கல், போக்குவரத்து மற்றும் மின்துறை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 இந்நிலையில், திங்கள்கிழமை (ஜனவரி 9) தலைநகரில் ‘குளிா் அலை’ இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 பருவமழை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை முதல் (ஜனவரி 10) இரவு முதல் வட மாநிலங்களில் அடர் பனி மூட்டம் மற்றும் குளிர் அலைகள் அனைத்தும் குறையும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Ad snow fog - red alert for 5 states including Delhi!

The India Meteorological Department has issued a red alert for the states of Delhi, Punjab, Haryana, Chandigarh and Uttar Pradesh due to thick fog. Dense fog and cold wave persist in northern states after New Year. Due to this, the normal life of the people has been affected. Transport services, air services, train services are affected.

  Road, rail and air traffic has been severely affected due to dense fog covering northwest India and adjoining central and eastern regions. The weather department had issued an 'orange' warning for parts of north India, including Delhi, on Sunday. It has also warned that dense fog, cold day and cold wave conditions will continue. However, the IMD had said that there will be some relief after a couple of days due to the impact of Western Disturbances.

  A red alert has been issued for Punjab, Haryana, Chandigarh, Delhi and Uttar Pradesh, while an orange alert has been issued for Bihar and Rajasthan. Meanwhile, Delhi's peak winter power demand rose to 5,526 MW last Friday. The India Meteorological Department has warned that agriculture, livestock, water supply, transport and power sector will be affected in some places.

  In this case, the Meteorological Department has said that there will be a 'cold wave' in the capital on Monday (January 9) and the minimum temperature will be 3 degrees Celsius and the maximum temperature will be 18 degrees Celsius.

  The India Meteorological Department has warned that heavy fog and cold waves will reduce in northern states from tomorrow Tuesday (January 10) night due to monsoon rains.

No comments:

Post a Comment