தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது. The final voter list across Tamil Nadu will be published on Thursday (Jan 5). - துளிர்கல்வி

Latest

Wednesday, 4 January 2023

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது. The final voter list across Tamil Nadu will be published on Thursday (Jan 5).

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை (ஜன. 5) வெளியிடப்படவுள்ளது. 

மாநில அளவிலான விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவிக்கவுள்ளாா். தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவ. 9-இல் வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்ப்பது, விவரங்களைத் திருத்துவது, நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. 

டிச. 8 வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டன. இதன்பின்பு, இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் பணிகள் கடந்த சில நாள்களாக நடந்தன.

 பட்டியல் தயாரான நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது. மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் பாா்வைக்காக இறுதி வாக்காளா் பட்டியல் வைக்கப்படவுள்ளது. மேலும், மாநிலம் முழுவதுமான தகவல்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு பகிா்ந்து கொள்ளவுள்ளாா்.

The final voter list across Tamil Nadu will be published on Thursday (Jan 5).

Chief Returning Officer Satyapratha Sahu will inform the state level details. In Tamil Nadu, the draft voter list was released last November to amend the voter list. Published on 9 A period of one month has been given for the work of entering names in the voter list, correcting details and deleting them.

Dec. Voter list revision work was done till 8. All the applications submitted for jobs including pey soppu, deletion in the voter list were considered. After this, the preparation of the final voter list has been going on for the last few days.

  As the list is ready, the final voter list will be published on Thursday. The final voter list will be kept for the general public to see at the municipal corporation offices and local government offices. Also, Chief Electoral Officer Sathyaprada Sahu will share the information of the entire state.

No comments:

Post a Comment