தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.According to the Chennai Meteorological Department, one percent more rain has been recorded in Tamil Nadu due to northeast monsoon. - துளிர்கல்வி

Latest

Sunday, 1 January 2023

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.According to the Chennai Meteorological Department, one percent more rain has been recorded in Tamil Nadu due to northeast monsoon.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்யும் வழக்கமான 440.30 மி.மீ மழையை காட்டிலும் இந்த முறை ஒரு சதவீதம் அதிகமான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கிடப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. 

இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக 440.30 மி.மீட்டர் மழை பதிவாவது வழக்கம். இந்த முறை வழக்கத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. 

வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை திங்கட்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

According to the Chennai Meteorological Department, one percent more rain has been recorded in Tamil Nadu due to northeast monsoon.

According to the Chennai Meteorological Department, the rains this time are one percent more than the usual 440.30 mm of rain that falls during the Northeast Monsoon season in Tamil Nadu.

  In this regard, the Chennai Meteorological Center has said in a statement issued yesterday:- According to the practice of the Meteorological Center, the period from October 1 to December 31 is considered as the Northeast Monsoon season. The Northeast Monsoon season ended in Tamil Nadu and Puducherry on Saturday.

440.30 mm of rain is usually recorded during this period. This time we have received one percent more rain than usual. 21 districts have received less than normal rainfall during the Northeast Monsoon season.

According to the weather forecast, dry weather is likely to prevail in Tamil Nadu, Puducherry and Karaikal on Monday. Chennai and its suburbs will experience partly cloudy skies during the next 48 hours.

No comments:

Post a Comment