விமான படைக்கு மருத்துவ உதவியாளர்கள் தேர்வு - துளிர்கல்வி

Latest

Monday, 30 January 2023

விமான படைக்கு மருத்துவ உதவியாளர்கள் தேர்வு

விமான படைக்கு மருத்துவ உதவியாளர்கள் தேர்வு 

 திருநெல்வேலி விமான படைக்கு மருத்துவ உதவியாளர்கள் தேர்வு வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- 

மருத்துவ உதவியாளர்கள் இந்திய விமான படையில் மருத்துவ உதவியாளருக்கான (ஆண்) ஆட்கள் சேர்ப்பு முகாம் சென்னை தாம்பரத்தில் நடைபெறுகிறது. வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. அகில இந்திய அடிப்படையில் வேலை வாய்ப்புக்கு தேர்வு இருந்தாலும், குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட பகுதிகளை சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்திய விமான படைக்கான ஆட்சேர்ப்பு முகாம்கள் கட்டணம் ஏதும் இன்றி நடத்தப்படுகிறது.

 இதுதொடர்பான விவரங்களை www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். முன்னாள் படை வீரர்கள் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சைனிக் பள்ளியில் படிப்பதற்கு கல்வியாண்டு 2022-2023 முதல் ஊக்கத்தொகை ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் தொகுப்பு நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிதி உதவி பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படை வீரராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது 

Tirunelveli Air Force Medical Assistants Exam will start on 1st. Nellai District Collector Vishnu said in a press release:- Medical Assistants Recruitment camp for Medical Assistant (Male) in Indian Air Force is being held at Tambaram, Chennai. 

It starts from the 1st (Wednesday) and continues till the 9th. Although recruitment is conducted on an all-India basis, recruitment camps for the Indian Air Force are conducted free of charge to provide opportunities to deserving youth from under-represented areas. Details related to this can be found on the website www.airmenselection.cdac.in. Ex-Servicemen Children of Ex-Servicemen to study in Sainik School from the academic year 2022-2023 is being given an incentive of Rs.25 thousand per year from the lump sum fund. 

To avail this financial assistance, one should be an ex-serviceman under the officer qualification, domiciled in Tamilnadu and residing in Tamilnadu. For more details contact the Assistant Director, Ex-Servicemen Welfare Office, Tirunelveli. It says so

No comments:

Post a Comment