தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு Chance of rain in coastal districts of Tamil Nadu today - துளிர்கல்வி

Latest

Monday, 2 January 2023

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு Chance of rain in coastal districts of Tamil Nadu today

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு 

 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Chance of rain in coastal districts of Tamil Nadu today

  Light to moderate rain may occur at one or two places over coastal districts of Tamil Nadu, Puduwai and Karaikal today due to variation in speed of easterly winds.

Chennai Meteorological Department said dry weather is likely to prevail in interior districts. Chennai and its suburbs will remain partly cloudy for the next 24 hours.

  Light rain may occur at a few places in the city. According to the Meteorological Department, the maximum temperature will be 31 degree Celsius and the minimum temperature will be around 22-23 degree Celsius.

No comments:

Post a Comment