காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். Governor RN Ravi mentioned in his address that the number of students coming to school has increased due to the breakfast program. - துளிர்கல்வி

Latest

Sunday, 8 January 2023

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். Governor RN Ravi mentioned in his address that the number of students coming to school has increased due to the breakfast program.

காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில், 2 புதிய பறவைகள் சரணாலயம் மற்றும் அகஸ்தியர் மலை யானைகள் சரணாலயம் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அழிந்து வரும் உயிரினமான நீலகிரி வரையாடு இனத்தை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னையில் தமிழ்நாட்டின் நலனை பாதுகாத்து வருகிறது தமிழ்நாடு அரசு. முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரை தமிழ்நாடு அரசு தேக்குகிறது. நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.1,500 கோடியில் தமிழ்நாடு நீர்வளத்தை பெருக்குவதற்கான திடடங்களை மேற்கொண்டு வருகிறது. மேக்கேதாட்டு அணையை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.

 முதல்வரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு இடங்களில் மினி டைடல் பார்க் தொடங்கப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. 

பரந்தூர் விமான நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. குறைந்த கால நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. 

மாநில உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் நீட் தேர்வு உள்ளது. கிராமப்புற மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். திங்கள்கிழமை ஆளுநா் உரையாற்றிய பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும். இதன்பின், செவ்வாய்க்கிழமை பேரவை மீண்டும் கூடி, காங்கிரஸ் உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். 

சட்டப் பேரவை உறுப்பினா் என்பதால், அன்றைய நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (ஜன. 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 13) வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டு அந்தத் தீா்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும். இதில், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரையாற்றுவா்.

 தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுவாா். இதன்பிறகு, கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைப்பாா். சட்டம்-ஒழுங்கு, பொங்கல் தொகுப்பு, ஆசிரியா்கள், செவிலியா்கள் போராட்டப் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்னைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில்களை அளிக்க அரசுத் தரப்பும் தயாராகி வருகிறது.

Governor RN Ravi mentioned in his address that the number of students coming to school has increased due to the breakfast program.

  Tamil Nadu Legislative Assembly convened today in a tense political situation. As it was the first meeting of the New Year, the meeting started with a speech by Governor RN Ravi. In his address, the Governor said that the Government of Tamil Nadu has set up 2 new bird sanctuaries and Agasthyar Hill Elephant Sanctuary. The government is taking steps to save the endangered species of the Nilgiris.

The Tamil Nadu government is protecting the interest of Tamil Nadu in the inter-state river water issue. The Tamilnadu government stores 142 feet of water in the Mullaiperiaru dam. Steps are being taken to raise the water level. 1,500 crore Tamil Nadu is carrying out projects to increase water resources. Tamil Nadu is determined not to build Makedatu dam.

  The Chief Minister's breakfast program is well implemented. Mini Tidal Parks are being started at various places. The breakfast program has increased the number of students coming to school. Employment has increased since the new government took over. The government has started the process of setting up a green airport at Parantur.

Through Parantur Airport, the traffic congestion will be greatly reduced. Small and micro enterprises have grown. About 28 thousand crores of foreign investments have come to Tamil Nadu. The Tamil Nadu government successfully organized the International Chess Olympiad in a short period of time. The NEET Exemption Bill has been sent for the assent of the President and is pending.

NEET is a disenfranchisement of the state and against rural students. Innovation girl program has been implemented for the educational development of rural students. He mentioned thus. A formal review meeting will be held on Monday at noon to discuss the number of days to hold the session. In this meeting the days of the assembly session will be finalised. After the Governor's address on Monday, the Assembly will adjourn. After this, the assembly will meet again on Tuesday and the Congress member will condole the demise of Mr. Evera.

As it is a member of the Legislative Assembly, the Assembly will be adjourned for the rest of the day. Following this, it is expected that a series of assembly meetings will be held from Wednesday (Jan. 11) to Friday (Jan. 13). A resolution of thanks for the Governor's speech will be proposed in the Assembly on Wednesday and debates will be held on the resolution. In this, the members of the ruling party and opposition parties will address.

  Chief Minister M. K. Stalin will speak in response to the debates on the decision. After this, the assembly chairman M. Appa will adjourn the meeting without specifying a date. The opposition parties are raising the issues of law and order, Pongal collection, teachers and nurses protest. It seems that these issues will resonate in the Legislative Assembly. At the same time, the government side is also preparing to give appropriate answers to the issues raised by the opposition parties.

No comments:

Post a Comment