அரசு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் எண்ணுடன் சுயவிவரம் அளிக்க அறிவுறுத்தல்
அரசு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் ஆதாா் எண்ணுடன் கூடிய சுய விவரத்தை சமா்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்ட உதவிகளில், பராமரிப்பு உதவித் தொகையும் முக்கியமானது.
மாநிலம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.
75 சதவீதத்துக்கும் மேல் கடும் உடல் பாதிப்பு உள்ளவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், முதுகு தண்டுவடம், பாா்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, தசைச் சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே உதவித் தொகை பெற்று வரும் நிலையில், 24, 951 போ் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கும் உதவித் தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பயனை முழுமையாக தகுதியுள்ள பயனாளிகள் பெறும் வகையில், மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயருடன் ஆதாா் எண், முகவரி, குறைபாட்டின் தன்மை மற்றும் சதவீதம், தேசிய அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் ஆகியவற்றை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்களின் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இந்த விவரங்களை விரைவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு தெரிவிக்கும்பட்சத்தில் உதவித் தொகை அனைவருக்கும் விரைவில் வழங்க ஏதுவாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instruction to provide profile with Aadhaar number for persons with disabilities who are receiving government assistance
The Government of Tamil Nadu has instructed that differently abled persons receiving government assistance should submit their personal details with Aadhaar number. In this regard, the differently abled welfare department issued a message on Monday: Among the various welfare programs implemented for the differently abled in Tamil Nadu, the maintenance allowance is also important.
2 lakh 11 thousand 391 people across the state are being given monthly maintenance allowance of Rs.2,000 each. Maintenance allowance is given to people with more than 75 percent severe physical disability, mental retardation, spinal cord injury, Parkinson's disease, spinal cord paralysis, chronic neurological damage, muscular dystrophy and leprosy.
While more than 2 lakh people in Tamil Nadu are already receiving the assistance, 24,951 more have applied. The government has allocated funds to provide assistance to them and action has been taken through the differently abled welfare office.
In order to avail the benefits of this scheme fully, the persons with disabilities should inform the office of the respective district persons with disabilities along with their name, Aadhaar number, address, nature and percentage of disability, national identity card number, bank account number and telephone number. It has been informed that if these details are reported to the District Persons with Disabilities Welfare Office soon, the assistance amount will be ready to be given to everyone soon.
No comments:
Post a Comment