வேலை வாய்ப்பு முகாம் Job placement camp - துளிர்கல்வி

Latest

Monday, 30 January 2023

வேலை வாய்ப்பு முகாம் Job placement camp

வேலை வாய்ப்பு முகாம் 

அரியலூர் 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்தில் உள்ள மாடர்ன் கல்லூரியில் தனியார் துைற வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

 முகாமை திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்து, முகாமில் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு பணி நியமன ஆணைைய வழங்கினார். முன்னதாக திருச்சி மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் வரவேற்று பேசினார்.

 நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், மாடர்ன் கல்வி நிறுவனத்தலைவர் பழனிவேல், துணை தலைவர் எம்.கே.ஆர்.சுரேஷ் மற்றும் தனியார் தொழில் நிறுவனத்தினர், பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 Job placement camp Ariyalur Ariyalur District, Ariyalur District, Modern College, Mahimaipuram near Jeyangondam conducted a private placement camp. K.S.K.Kannan MLA. He took the lead. The camp was organized by Thirumavalavan MP. Inaugurating it, he gave appointment orders to 50 people selected in the camp. Chandran, the Associate Director of Trichy Zonal Placement, gave the welcome speech. 

District Employment Officer Kalaichelvan, Jayangkondam Municipal Council Chairman Sumathi Sivakumar, Modern Education Institute Chairman Palanivel, Vice Chairman MKR Suresh and many other private companies and graduates participated in the event.

No comments:

Post a Comment