ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை நிறுத்தியதற்கு - கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.KS Alagiri has condemned for stopping the food program for the poor. - துளிர்கல்வி

Latest

Wednesday, 4 January 2023

ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை நிறுத்தியதற்கு - கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.KS Alagiri has condemned for stopping the food program for the poor.

ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தை நிறுத்தியதற்கு - கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக 10 கிலோ உணவு தானியங்களைப் பெற 81 கோடி இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர். ஆனால், தற்போது அவர்கள் 5 கிலோ உணவு தானியங்களை மட்டுமே பெற முடியும். வழக்கம்போல் மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமலும் இந்தத் திட்டத்தை ரத்து செய்து தன்னிச்சையான முடிவை பிரதமர் எடுத்துள்ளார். இத்தகைய முடிவின் மூலம் ரூ.1 லட்சம் கோடி சேமித்து மோடி அரசு தான் உண்மையான பயனாளராக மாறியிருக்கிறதே தவிர, குடும்ப அட்டை தாரர்கள் அல்ல.

 ஏழை மக்களுக்குத் தான் கூடுதல் செலவு ஏற்படப் போகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்ததை விட, ஒவ்வொரு அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இன்றைக்குப் பெருமளவு உயர்ந்துள்ளது. பெரும்பாலான இந்தியர்களின் வருவாய் அதிகரிக்கவில்லை.

 ஆனால் வேலையின்மை விகிதம் இதுவரையில்லாத அளவுக்குச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ஹங்கர் வாச் அமைப்பின் கணக்கெடுப்பின்படி, 80 சதவிகித மக்கள் உணவுக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 2022 உலகளாவிய பட்டினி குறித்த உள்ளடக்கத்தின் சர்வேயின்படி, பட்டினி கிடக்கும் மக்களைக் கொண்ட 121 நாடுகளில் இந்தியா 107 வது இடத்தில் இருப்பதை எண்ணி வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. 

  ஒருவர் கூட பட்டினியோடு இருக்கக்கூடாது என்பதற்காக, உணவு உரிமைச் சட்டத்தை கடந்த 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. தவறான பொருளாதார நிர்வாகத்தால் பின்னடைவைச் சந்தித்துள்ள இன்றைய நிலையில், இந்த திட்டத்தை மோடி அரசு நிறுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும் பரிசு அல்ல. அது அவர்களது உரிமை என்பதை மோடி அரசுக்கு நினைவூட்டுகிறேன். 2021 ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் ஏற்பட்ட அளவுக்கு மீறிய தாமதம் காரணமாக, 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் குடும்ப அட்டை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உடனே குடும்ப அட்டை வழங்க வேண்டும். பசியோடு போராடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2021ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவைச் செயல்படுத்த மோடி அரசு தவறிவிட்டது. இந்த உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். வறுமையை ஒழிப்பதற்காக சோனியா காந்தியின் எண்ணத்தில் உதித்த மக்களுக்கு ஆதரவான மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் வரை, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது மோடி எதிர்த்தார். 

ஆனால், பிரதமரானதும் அந்தத் திட்டங்களால் ஆதாயம் தேடிக்கொண்டே, மறுபுறம் ஏழைகளின் மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம் ?.

KS Alagiri has condemned for stopping the food program for the poor.

Tamil Nadu Congress Committee President KS Azhagiri has said in a statement:- According to the National Food Security Act, 81 crore Indians were eligible to receive 10 kg of food grains in the Prime Minister's food program for the poor in the last 2 years. But now they can get only 5 kg of food grains. As usual, the Prime Minister has taken an arbitrary decision to cancel the project without consulting the state governments and without discussing it in Parliament. With such a decision, Modi government has become the real beneficiary by saving Rs.1 lakh crore, not the family card holders.

  It is the poor people who are going to have to bear the extra cost. The price of every basic essential commodity today is much higher than it was during the Congress-led UPA regime. Incomes of most Indians have not increased.

  But the unemployment rate is at an all-time high. According to a survey by Hunger Watch, 80 percent of the population is food insecure. According to the Global Hunger Content Survey 2022, India ranks 107 out of 121 countries with the highest number of hungry people.

   The United Progressive Alliance government brought the Right to Food Act in September 2013 to ensure that no one goes hungry. I strongly condemn the Modi government's suspension of this scheme in today's state of setbacks due to economic mismanagement.

  Under the National Food Security Act, free distribution of food grains is not a gift to the people of India. I remind the Modi government that it is their right. Due to inordinate delay in taking census in 2021, more than 10 crore people are without family card. They should be given a family card immediately. The Supreme Court has directed that migrant laborers who are struggling with hunger should be given food items even if they do not have family cards.

The Modi government has failed to implement this order issued in June 2021. This order should be implemented immediately. The Modi government should immediately stop violating the National Food Security Act. From the pro-people Mahatma Gandhi Rural Employment Guarantee Act to the National Food Security Act, which Modi opposed when he was Chief Minister of Gujarat, Sonia Gandhi's vision for poverty alleviation.

But, after becoming the Prime Minister, while seeking profit from those projects, on the other hand, how is it fair to hit the stomach of the poor people?

No comments:

Post a Comment