புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட என்.சி.சி. மாணவிகள் NCC visited the photo exhibition. Students - Thulirkalvi

Latest

Sunday, 22 January 2023

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட என்.சி.சி. மாணவிகள் NCC visited the photo exhibition. Students

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட என்.சி.சி. மாணவிகள்

 நீலகிரி ஊட்டி, நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட பணி விளக்க கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்து வருகிறது. 

சுற்றுலாத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், சாதனைகள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு உணவு திருவிழா, சிறப்பு வாய்ந்த கைவினை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. நேற்று தாவரவியல் பூங்காவில் நடந்த புகைப்பட கண்காட்சியை ஈேராடு மாவட்ட அரசு கல்லூரி என்.சி.சி. (தேசிய மாணவர் படை) மாணவிகள் பார்வையிட்டனர். நுழைவுவாயிலில் எல்.இ.டி. மின்னணு வாகனம் மூலம் அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்கள் ஒளிபரப்பப்படுகிறது.

NCC visited the photo exhibition. Students

  Nilgiris Ooty, On behalf of the Nilgiris District Press and Public Relations Department, a photo exhibition on the projects and achievements of the Tamil Nadu Government and a work presentation exhibition organized by all departments under the title 'One year of hard work, bearing the dreams of Kadakodi Tamils' is going on at the Ooty Government Botanical Garden.

Halls have been set up on welfare assistance and achievements provided by various departments such as Tourism Department, Adi Dravidian and Tribal Welfare Department, Social Welfare Department, Women's Programme, District Rural Development Agency, Medical and People's Welfare Department, Forest Department, Horticulture Department.

  Food festival, special handicrafts and other items, medical camps for women and children are organized by women self help groups. Eradu District Government College NCC organized a photo exhibition at the Botanical Garden yesterday. (National Student Corps) girls visited. LED at the entrance. Explanatory films about the achievements of the government are telecasted through the electronic vehicle.

No comments:

Post a Comment