தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கு இனி டிஜிட்டல் சான்றிதழ்! புதிய நடைமுறை அறிமுகமாகிறது
சிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் முறையிலான சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் மாநிலம் முழுவதும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்‘ஃ‘ப்ளூயன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் - ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11,000 இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் அச்சிடப்பட்டு அதில் கைகளால் எழுதிக் கொடுக்கும் முறையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் யூ-வின் செயலியின் தொடக்க நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காணொலி முறையில் தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனா்.
கரோனா தடுப்பூசிக்கான கோவின் செயலியைப் போன்று இதுவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக இரு மாவட்டங்களில் அந்த செயலியின் மூலம் வழக்கமான தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
இதன் வாயிலாக உலகின் எந்த மூலையிலிருந்தும் தடுப்பூசி தவணை நிலையை அறிந்து கொள்ள இயலும்.
யூ-வின் செயலியில் அதனை எந்த தருணத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.
Now digital certificate for vaccines provided under National Immunization Program! A new procedure is introduced
The practice of issuing digital certificates for vaccines provided under the CIA vaccine scheme is to be introduced in Tamil Nadu. The Public Health Department said that the scheme will be implemented in Dindigul and Erode districts in the first phase and soon it will be expanded across the state. A total of 11 types of vaccines are currently provided under the National Immunization Schedule.
Accordingly, for ailments including tuberculosis, liver infection and cancer, tetanus, whooping cough, whooping cough, strep throat, influenza infection, liver infection, pneumonia, diarrhoea, measles and rubella, Japanese meningitis, vitamin-A deficiency. Vaccinations are provided. 9.4 lakh children are vaccinated annually under this scheme.
Children are given vaccinations at 11,000 places including Government Medical College Hospitals, Regional Hospitals, District Head Hospitals and Primary Health Centres. A separate book or card is printed for the vaccination schedule and hand written on it has been followed so far. In this case, the opening ceremony of the central government's U-win app was held in Delhi on Tuesday. Officials of Tamil Nadu Public Health Department participated in it through video.
It has been reported that it will work like Kovin's app for Corona vaccine. Accordingly, in the first phase in Tamil Nadu, a scheme to provide digital certificates for routine vaccinations is going to be introduced in two districts through the app. Director of Public Health Department, Dr. Selvavinayagam said: The system of issuing digital vaccination certificates will soon be implemented in all districts of Tamil Nadu.
Through this one can know the vaccination status from any corner of the world. He said that it can be downloaded at any time on the U-win app.
No comments:
Post a Comment