அகவிலைப்படி உயர்வு சந்தேகங்களை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் Tamil Nadu government should clarify the doubts about the increase in the basic price - O. Panneerselvam - துளிர்கல்வி

Latest

Sunday, 8 January 2023

அகவிலைப்படி உயர்வு சந்தேகங்களை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் Tamil Nadu government should clarify the doubts about the increase in the basic price - O. Panneerselvam

அகவிலைப்படி உயர்வு சந்தேகங்களை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1971-76-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை எட்டு முறை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. இதனை சரி செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கி அவர்களை பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர். தற்போதைய அகவிலைப்படி உயர்வு ஆணைகள் உரிமையை நிலைநாட்டுவது போல் இல்லை. 

 'திராவிட மாடல்' என்பதற்கேற்ப தி.மு.க. அரசு எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது தான் கொடுக்கும் என்ற அதிகாரப் போக்கினை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உணர்த்துவது போல் அமைந்துள்ளது. எம்.ஜி.ஆர். வகுத்த கொள்கையிலிருந்து, புரட்சித் தலைவி அம்மா கடைபிடித்த முறையிலிருந்து வேறுபட்டு புதிய முறையைக் கடைபிடிப்பது என்பது எதிர்காலத்தில் அகவிலைப்படி உயர்வை அபகரிப்பதற்கான, தாமதப்படுத்துவதற்கான ஏற்பாடோ என்ற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் நிலவுகிறது.

 தி.மு.க. அரசின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு மாற்றியமைக்கப்பட்டதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இனி வருங்காலங்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் போதெல்லாம் அதே தேதியிலிருந்து மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்

Tamil Nadu government should clarify the doubts about the increase in the basic price - O. Panneerselvam

O. Panneerselvam has said in a statement that in 1971-76 DMK The DMK government suspended the increase in allowances for government employees eight times during the regime. Govt. It was MGR who rectified this and protected the state government employees by giving them a raise whenever the central government employees were given a raise. It is not as if the orders of increase in the present price do not establish the right.

  According to the 'Dravidian model' DMK It is as if the government employees, teachers and pensioners are feeling the power trend of giving whenever they feel like giving. MGR There is apprehension among government employees, teachers and pensioners that adopting a new system different from the laid down policy and the system adopted by the revolutionary leader Amma is an arrangement to usurp and delay the future increase in subsidized rates.

  DMK I strongly condemn the hostility of the government, government employees and teachers. I request the Chief Minister to immediately intervene in this matter and clarify the reversal of the time-honored tradition and ensure that in future, whenever the Central Government employees are given a raise on the merits, it is given to the State Government employees from the same date.

No comments:

Post a Comment