அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிகள்!!! Tamilnadu government provides assistance to differently abled students writing government public examination!!! - துளிர்கல்வி

Latest

Friday, 27 January 2023

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிகள்!!! Tamilnadu government provides assistance to differently abled students writing government public examination!!!

அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிகள்!!! 

திருவண்ணாமலை 

செய்யாறு 

செய்யாறு ஒன்றிய வட்டார வள மையத்தின் சார்பில் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சத்யராஜ், செய்யாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஊர்வலத்தை செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இதில் பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் வாசித்தும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தும் செய்யாறு பஸ் நிலையம் வழியாக முக்கிய வீதியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் செய்யாறு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 Tamilnadu government provides assistance to differently abled students writing government public examination!!! Thiruvannamalai Seyyar An awareness procession for differently abled students was held at Seyyar Government Boys High School on behalf of Seyyar Union Regional Resource Centre. District Education Officer Purushothaman presided.

 District Education Officer Satyaraj, District Resource Center Supervisor (in-charge) Seiyaru presided. The procession was inaugurated by Jayakanthan Khidiyasaithu, Headmaster, Government Boys' Higher Secondary School, Cheyar. In this, the school students read awareness slogans for differently-abled students and distributed pamphlets to the public and went to the main road through Seyyar Bus Station to create awareness. 

Many people including Seyyar district resource center teacher instructors, special instructors, traditional medicine doctors participated in this.

No comments:

Post a Comment