நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல் Urge to pass the NEET Exemption Bill - Thulirkalvi

Latest

Tuesday, 10 January 2023

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல் Urge to pass the NEET Exemption Bill

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

 நீட் தோ்வு விலக்கு சட்டமசோதாவுக்கு குடியரசுத் தலைவா் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளுநா் உரையில் கூறியிருப்பது: நீட் தோ்வு கிராமப்புற ஏழை மாணவா்களை மிகவும் பாதிப்பதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை கருத்தில்கொண்டு, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தோ்வில் இருந்து தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்தச் சட்டம் குறித்து கோரப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்ட முன்வடிவுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது

Urge to pass the NEET Exemption Bill

  In the governor's speech, it has been emphasized that the President should speedily approve the NEET exemption bill. The Governor said in his speech: Considering that NEET Dhovu is affecting poor rural students and taking away the rights of the state governments, the Tamil Nadu government constituted a committee headed by Justice AK Rajan to study the matter. Based on the recommendations of the committee, we have passed the draft law in Tamil Nadu to exempt medical students from the NEET exam in the Legislative Assembly and sent it to the President for approval. It said that the government insists on expeditious approval of the draft law as all clarifications sought on the bill have been provided.

No comments:

Post a Comment