பென்குயின் பறவையிடம் பாட்டி சொன்ன ரகசியம்: இணையத்தை கலக்கும் வேடிக்கை உரையாடல்
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பிணைப்பும் பந்தமும் எப்போதுமே அலாதியானது. இன்றைய இணைய உலகில் சோர்ந்திருக்கும் மனதினை புத்துணர்ச்சியாக்க இதுபோன்ற நிறைய வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அப்படி டபுள் புத்துணர்ச்சி தரும் வகையில் வைரலாகி வருகிறது பென்குயின் பறவையுடன் பாட்டி ஒருவர் பேசும் வீடியோ ஒன்று.
ஒரு நிமிடம் வரை ஓடுகிற அந்த வீடியோவில் சாலையில் நடந்து வரும் வயதான பெண்மணி ஒருவரை நோக்கி பென்குயின் பறவை ஒன்று நடந்து செல்கிறது.
அவரின் அருகில் சென்று அவர் கையில் இருக்கும் குடையினை முத்தமிடுவது போல் பாவனை செய்கிறது. அந்த பெண்மணி செல்லும் இடத்திற்கு எல்லாம் பென்குயினும் தொடர்ந்து செல்கிறது. அந்த பென்குயினிடம் அந்த வயதான பெண்மணி பிரெஞ்சு மொழியில் உரையாடுகிறார். அதனை பயனர் ஒருவர் மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் மொழிபெயர்ப்பின் படி, ஓ.. நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். நான் உன்னை நேசிக்கிறேன் (திரும்பவும் சொல்கிறார்). நீயே என் விருப்பத்திற்குரியவள். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.
நீ அழகாக இருக்கிறார். இங்கு இருப்பவர்களில் உன்னை மட்டுமே நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த குடையிலிருந்து என்ன வேண்டும் உனக்கு. நாளைக்கு நீ வருவாயா. நான் நாளை உன்னை மீண்டும் சந்திக்கிறேன்.
கேபிரியேல் கோர்னோ (Gabriele Corno) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 26 ஆயிரத்து 200 பேர் விரும்பியுள்ளனர். 3647 பேர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
பயனர் ஒருவர், அது மிகவும் அழகானது, ஆனால் அந்த பென்குயின் அந்த குடையை அழகான பென்குயின் என்று நினைத்துவிட்டதாக நான் என்னுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், ஓ.. இது எவ்வளவு அழகானது. அந்த பெண்மணி மிகவும் மெதுவாக பேசுகிறார். என்னுடைய புரிதல் படி அவர் ஐ லவ் யூ, கிஸ்ஸஸ் என்று கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது நபர் இது மிகவும் அற்புதமானது நான் அவர்களை மிகவும் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment