தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் Dry weather will prevail in Tamil Nadu from today till 18th - Thulirkalvi

Latest

Friday, 12 January 2024

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் Dry weather will prevail in Tamil Nadu from today till 18th

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்

சென்னை, 

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (12.01.2024) தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

(13.01.2024 முதல் 18.01.2024 வரை) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

நகரின் ஒருசில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Dry weather will prevail in Tamil Nadu from today till 18th

Chennai,

  According to a statement issued by the Chennai Meteorological Department:-
  Today (12.01.2024) there may be light to moderate rain at a couple of places in the South-East due to the upper atmospheric circulation over the Kumari Kadal and adjoining areas.

Dry weather is likely to prevail in North Tamil Nadu, Puduwai and Karaikal. A few places in Tamil Nadu are likely to experience light fog in the morning.

(13.01.2024 to 18.01.2024) Dry weather is likely to prevail over Tamil Nadu, Puduwai and Karaikal. A few places in Tamil Nadu are likely to experience light fog in the morning.

  Chennai and its suburbs will remain partly cloudy for the next 48 hours.

A few places in the city are likely to experience light fog during the morning hours. It says so.

No comments:

Post a Comment