தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு Chance of very heavy rain in 7 districts of Tamil Nadu today - துளிர்கல்வி

Latest

Monday, 8 January 2024

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு Chance of very heavy rain in 7 districts of Tamil Nadu today

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, 

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

 தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (08.01.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

 நாளை (09.01.2024) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (10.01.2024) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  

 (11.01.2024 முதல் 14.01.2024 வரை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Chance of very heavy rain in 7 districts of Tamil Nadu today

Chennai,

  According to a statement issued by the Chennai Meteorological Department:-

  Today (08.01.2024) light to moderate rain with thunder and lightning is likely to occur at many places in Tamil Nadu, Puduvai and Karaikal today (08.01.2024) due to low atmospheric circulation over Southeast Arabian Sea.

Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Cuddalore, Villupuram, Chengalpattu, Thiruvannamalai districts and Puducherry and Karaikal regions may experience heavy to very heavy rains. Thoothukudi, Virudhunagar, Tirunelveli, Thanjavur, Kallakurichi, Salem, Vellore, Ranipet, Kanchipuram, Thiruvallur and Chennai districts. Heavy rain may occur at a few places.

  Tomorrow (09.01.2024) Light to moderate rain with thunder and lightning is likely to occur at many places in South-East, a few places in North-East, Puduwai and Karaikal. Kanyakumari, Tirunelveli, Thoothukudi and Ramanathapuram districts may experience heavy rain at one or two places.

Day after tomorrow (10.01.2024) Light to moderate rain may occur at a few places in South-East, a couple of places in North-East, Puduwai and Karaikal. Kanyakumari, Tirunelveli, Tenkasi and Tuticorin districts may experience heavy rain at one or two places.

  (11.01.2024 to 14.01.2024) Light to moderate rain may occur at a few places in Tamil Nadu, Puduvai and Karaikal.

  Chennai and its suburbs will remain partly cloudy for the next 48 hours. Light to moderate rain may occur at a few places in the city.

The maximum temperature is likely to be around 29 degrees Celsius and the minimum temperature is likely to be around 23-24 degrees Celsius. It says so.


No comments:

Post a Comment