தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.! - துளிர்கல்வி

Latest

Wednesday, 10 January 2024

தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

நெல்லை, 

 தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. 

 மலைப் பகுதிகளில் நீடித்து வரும் கனமழையால், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

மேலும், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு, தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 538 கன அடி நீர்வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு, வினாடிக்கு 2,547 கன அடி தண்ணீர் வருகிறது.

Flooding again in Tamiraparani river.. Warning to coastal people.!

Paddy,

  Atmospheric low circulation is prevailing over Southeast Arabian Sea and adjoining areas. As a result, Nellai district has been receiving continuous rain for the past few days.

  Due to continuous heavy rains in the hilly areas, water flow has continuously increased in dams like Papanasam, Manimutthar, Chervalar.

Also, it is said that the Babanasam dam with a capacity of 143 feet currently has a water flow of 2 thousand 538 cubic feet per second. Similarly, 2,547 cubic feet of water per second flows into the Manimuthar Dam, which has a capacity of 118 feet.

Accordingly, 2 thousand 547 cubic feet of water per second from Papanasam Dam and 2 thousand 547 cubic feet of water per second from Manimutharu Dam are released into the Tamiraparani River. At present, about 5 thousand cubic feet of water is being released in the Tamiraparani river.

  Water flows in the river touching both banks. Therefore, the district administration has warned people not to go down or bathe in the river for the safety of the public.

அதன்படி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 547 கன அடி தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தற்போது தாமிரபரணி ஆற்றில் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 

 ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment