நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129-வது பிறந்த நாள் - ஜனவரி 23 மாண்புமிகு அமைச்சர்
பெருமக்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
செலுத்துகிறார்கள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129-வது பிறந்த நாளை
முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் 23.1.2025
அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மெரினா கடற்கணர, காமராசர் சாலையில் அமைந்துள்ள
அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஒடிசா மாநிலத்தில் கட்டாக் எனுமிடத்தில்
23.1.1897 ஆம் நாள் ஜானகி நாத் போஸ்-பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தவர். பள்ளி, கல்லூரிக் காலங்களில் படிப்பில் அதிக ஆர்வமாக இருந்த போதிலும்,
ஆன்மீகத்திலும், தேசபக்தியிலும் நாட்டம் கொண்டிருந்தார்.
1915 ஆம் ஆண்டு கொல்கத்தா
மாநிலக் கல்லூரியில் படிக்கின்ற நாட்களில், இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைத்
தெரிவிந்த சி.எப். நுட்டன் என்கிற ஆங்கிலேய ஆசிரியரை எதிர்த்து கல்லூரியிலிருந்து
வெளியேறினார். பின்னர், தந்தையின் விருப்பத்திற்கேற்ப, 1920ஆம் ஆண்டு இலண்டன்
மாநகரில் ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவராகத் தேர்ச்சி பெற்றாலும், தாய்நாட்டில்
ஆங்கிலேயருக்கு அடிபணிந்து பணியாற்றிட விருப்பமில்லாமல் அப்பதவியைத் துறந்தார்.
நம்
தாய்நாடானது விடுதலை பெற்றிட வேண்டும் என்கிற தணியாத் தாகம் கொண்டிருந்ததாலும்,
1919ஆம் ஆண்டு நடந்த "ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து, அகிம்சை வழி
தவிர்த்து. ஆயுத வழிப்போரே இறுதித்தீர்வு என்று தீர்க்கமான முடிவு எடுத்தார். 1921
ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியவர்.
வங்கத்தின் 'தேசபந்து' சித்தரஞ்சன் தாஸ்
அவர்களைத் தனது அரிசியல அண்ணல்
காந்தியடிகளுக்கும், நேதாஜி அவர்களுக்கும் இடையே தொடர்ந்து ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகள் காரணமாக, தனது அரசியல் ஆசான் சித்தரஞ்சன்தாஸ் அவர்களின் வழியில்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, 1939ஆம் ஆண்டு "அகில இந்திய பார்வார்டு பிளாக்"
என்கிற புதிய கட்சியினைத் தொடங்கியவர், அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களையும் நியமித்தார். தாய்நாட்டு
மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தார்.
ஆங்கிலேயர்களின் அடக்கு முறையினை, அடிமைத்
தனத்தினை உலகத்திற்கு அரிய செய்து அவர்களின் ஆதரவினையும் பெற்றார். கெஞ்சியும்
கேட்டும் பெறும் யாசகப் பொருளல்ல விடுதலை! ரத்தம் சிந்தி போராடிப் பெற வேண்டிய
உரிமையே விடுதலை" என போர் முழக்கமிட்டார். தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக
முதன்முறையாக இந்திய தேசிய இராணுவப் படையினை உருவாக்கி. ஆங்கிலேயரை விழி பிதுங்கிட
வைத்தார். பார்வைக் குறைபாடு காரணத்தால் ராணுவத்தில் இணைந்து பணியாற்றிட அணுமதி
மறுக்கப்பட்ட நிலையில், பின்னாளில், தானே ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார்.
நேதாஜி அவர்களின் ராணுவப் படைக்கு தமிழ்ப் பெண்கள் நகைகளைக் தானமாகக் கொடுத்தனர்.
அந்த ராணுவத்தில் 'ஜான்சிராணி பெண்கள் படைப்பிரிவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த
லட்சுமி அம்மையார் தலைமையேற்றார். அன்னார் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற
வகையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நூற்றாண்டின் நினைவாக, முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களால் சென்னை, மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அன்னாரின் திருவுருவச்
சிலையினை 1997 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்கள்.
சுபாஷ் சந்திரபோஸ் நேதாஜி அவர்களின்
பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாகச் சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது.