மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் செய்தி மக்கள்
தொடர்புத்துறையின் ஊடக மையம் மூலம் குமரி முனையில் உள்ள
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி "திருக்குறள்
போட்டிகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில்
வெற்றிபெற்ற 45 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம்
வழங்கினார்கள்.
இந்தியத்துணைக் கண்டத்தின் வடக்கே அமைந்துள்ள வானுயர்ந்த
இமயமலைக்கு நிகராக, தெற்கே குமரிமுனையில் குமரிக்கடல் நடுவே முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் அவர்களுக்கு 133 அடியில் சிலை
அமைத்து 1.1.2000 அன்று திறந்து வைத்தார்கள்.
கலை நுணுக்கத்தோடு உலகம்போற்றும் வகையில் விண்ணைத்தொடும்
வண்ணம் உயர்ந்து நிற்கின்ற பெருமைமிகு திருவள்ளுவர் சிலையின் வெள்ளி
விழாவினையொட்டி 30:12.2024 முதல் 01.01.2025 வரை தமிழ்நாடு அரசின் சார்பில்
வெள்ளிவிழா கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 12.11.2024 அன்று அறிவித்திருந்தார்கள்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் முக்கடல் சூழும் குமரி
முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா 30.12.2024 மற்றும்
31.12.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ. 37 கோடி செலவில் அய்யன் திருவள்ளுவர்
சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை
திறந்து வைத்தல், அய்யன் திருவள்ளுவர் சிலையில் கீழ் அமைக்கப்பட்டுள்ள
"பேரறிவுச் சிலை" (Statue of Wisdom) அலங்கார வளைவினை திறந்து வைத்தல்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தாயாரிக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர்
திருவுருவச்சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிடுதல், ரூ. 1.45 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுவச்சிலை வெள்ளி
விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் வெள்ளி
விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது அந்தவகையில் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவினை
முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் மூலம் "திருக்குறள்
போட்டிகள்" என்ற தலைப்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி. கட்டுரைப் போட்டி,
வரைதல் போட்டி (Drawing), ஓவியப் போட்டி (Painting). குறும்படப் போட்டி. கவிதைப்
போட்டி மற்றும் சுயமிப் (செல்ஃபி) போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டிகள்
நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பிரிவில் 5,826
படைப்புகளும், கட்டுரைப் போட்டி பிரிவில் 2,245 படைப்புகளும், வரைதல் போட்டி
(Drawing) 2,555 படைப்புகளும், ஓவியப் போட்டி (Painting) பிரிவில் 2,356
படைப்புகளும், குறும்படப் போட்டி பிரிவில் 956 படைப்புகளும், கவிதைப் போட்டி
பிரிவில் 2,246 படைப்புகளும், சுயமிப் (செல்ஃபி) போட்டி பிரிவில் 3,748 படைப்புகளும்
என மொத்தம் 19,932 படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டன. இதில்
ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பான படைப்புகளைப் படைத்த படைப்பாளிகள் தேர்வு
செய்யப்பட்டு. மொத்தமாக 45 படைப்பாளிகள் வெற்றியாளர்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு 30.12.2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (10.01.2025) சென்னை, கலைவாணர் அரங்க
கூட்டங்கில் நடைபெற்ற நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக
மையம் சார்பில் "திருக்குறள் போட்டிகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட
போட்டிகளில் சிறந்த படைப்புகளைப் படைத்து வெற்றிபெற்றவர்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட 45 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம்
வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்
திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்
மரு.இரா.வைத்திநாதன். இ.ஆ.ப. செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள்
மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
tndiprnews
tndipr tndipr TN DIPR www.dipr.tn.gov.in TNDIPR, Govt.of Tamil Nadu
No comments:
Post a Comment