ஆங்கில புத்தாண்டையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற சங்க நிர்வாகிகளின் விவரங்கள் - Thulirkalvi

Latest

Friday, 3 January 2025

ஆங்கில புத்தாண்டையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற சங்க நிர்வாகிகளின் விவரங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (3.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், ஓட்டுநர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற சங்க நிர்வாகிகளின் விவரங்கள்: 

தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு. கு. வெங்கடேசன், செயலாளர் திரு. சு. ஹரிசங்கர், இணைச் செயலாளர் (பொது) திரு. இரா. லெனின், இணைச் செயலாளர் திரு. அ. ஜீவன், பொருளாளர் திருமதி சே. பிரபா; தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கத்தின் தலைவர் திரு. வே. ஐயப்பன், துணைத் தலைவர் திரு. கு. சரவணபெருமாள், செயலாளர் திரு. தூ. தேவேந்திரன், பொருளாளர் திரு. சி. சுரேஷ் குமார், தணிக்கையாளர் திருமதி கலைச்செல்வி; 

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. பெ. முனியப்பன், அகில இந்தியத் தலைவர் திரு. கே. கணேசன்; தமிழ்நாடு அனைத்துத் துறை பிரிவு ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கே. கணேசன், மாநில துணைத் தலைவர் திரு. து. முருகன், மாநில பொருளாளர் திரு. ஆர். வெங்கடேசன்; தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் திரு. கே. சாந்தகுமார், திருமதி ஜே. மணிமேகலை, திரு. எம்.வி. ஜெயபிரகாஷ்; 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் திரு. அமிர்தகுமார், பொதுச் செயலாளர் திரு. டி. விக்டர் பால்ராஜ், துணைத் தலைவர் திரு. ஆர்.சி.எஸ். குமார், துணைத் தலைவர் திருமதி திரவியத்தம்மாள், மாநில செயலாளர் திரு. ஈ. ஜெயபால்; தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. ப. பச்சையப்பன், பொதுச் செயலாளர் திரு. மு. தனபாலன், துணைத் தலைவர் திரு- க. விஜயன், மாநிலத் தணிக்கயாளர் திரு. ஏ. லட்சுமணன்; எஸ். தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் திரு கணேசன், திரு. எஸ். அப்சர் அலி, திரு. வேறு மற்றும் திரு. டி. உலகநாதன்; தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். பீட்டர் அந்தோணிசாமி, செயலாளர் திரு. ஏ. இளங்கோ, பொருளாளர் திரு. எஸ். சங்கர்: 

தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலக உதவியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் திரு. எஸ். ஜெயகுமார், திரு. ஆர். கர்ணன் மற்றும் திரு. கே. குமார்; தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் திரு. கு. தியாகராஜன். திரு. ப. உதயகுமார் மற்றும் திரு. ஏழுமலை; தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் திரு. சா. சங்கர், துணைத் தலைவர் திரு. ஆ. முத்துகுமார்; தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கத்தின் தலைவர் திரு. ஏ. துரைபாண்டி, பொதுச் செயலாளர் திரு. டி. அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் திரு. மகேந்திர குமார், திரு. ஜெயராமன், திரு. பிரபு. திரு. முத்துசாமி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை புத்தாண்டையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றனர். 




No comments:

Post a Comment