22.01.2025 அன்று சென்னை வந்த இந்த வல்லுநர் குழு, தமிழ்நாடு
அரசின் பல்துறை அலுவவயர்களுக்கு 23.01.2025 அன்று பேரிடருக்கு பிந்தைய சேத
மதிப்பீடு ஆய்வை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளித்தது.
பின்னர் இக்குழு
24.01.2025 முதல் 26.01.2025 முடிய விழுப்புரம், கடலூர். கள்ளக்குறிச்சி,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில்
ஃபெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் நோக்கில் நேரில்
சென்று மதிப்பீடு செய்தது. ஏற்கெனவே, ஃபெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட தற்காலிக
சேதங்களை மதிப்பீடு செய்ய ஒன்றிய அரசின் பல்துறை குழுவானது கடந்த டிசம்பர் மாதம்
ஆய்வை மேற்கொண்டது. ஃபெஞ்சல் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக
சீரமைக்கவும். நிவாரணம் வழங்கவும் ரூ.3104 கோடியும், நிரந்தர சீரமைப்புப்
பணிகளுக்கு ரூ.3881 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி ஒன்றிய அரசுக்கு
தமிழ்நாடு அரசால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்று (27.01.2025) அன்று,
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள், பே� [2:06
pm, 28/01/2025] Real Me: எழிலகத்தில் கலந்தாலோசித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுநர்களையும். தமிழ்நாடு அரசின் பல்துறை
அலுவலர்களையும் PDNA அறிக்கையினை விரைந்து சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசு, இந்த அறிக்கையினை ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் புயலால்
ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி
ஒதுக்கீடு பெறவும்.
இதன் மூலம் பேரிடரினால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்புகளை
தற்காலிக தொழில்நுட்பங்களை உட்படுத்தி சிறந்த முறையில் மீட்டுருவாக்கம் (Build Back
Better) செய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, கூடுதல் தலைமைச்
செயலர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப. அவர்களும்,
பேரிடர் மேலாண்மை இயக்குநர், திரு. வ. மோகனச்சந்திரன், இ.ஆ.1., மற்றும் பல்துறை
சார்ந்த அலுவலர்களும் உடன் இருந்தனர்.