மணற்கேணி செயலியை அதிகளவில் ஆசிரியர்கள் / மாணவர்கள் பயன்டுத்த அறிவுரை

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அனைத்து பள்ளிகளிலும் மணற்கேணி செயலியை அதிகளவில் ஆசிரியர்கள் / மாணவர்கள் பயன்டுத்துதல் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வாயிலாக மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துதல் - 
பெற்றோர்-ஆசிரியர் (PTA) கூட்டங்கள் நடத்தி மணற்கேணி செயலியின் காணொலி காட்சிகளை பெற்றோர் அறிய செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. 

பார்வை: 1. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 007694/ஜெ2/2024, நாள். 15.04.2024. 

2. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 023879/ஜெ2/2024, நாள். 24.12.2024. 

3. சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், ந.க.எண். 029159/ஜெ3/2024, நாள். 07.01.2025. 

4. அரசு முதன்மைச் செயலர் அவர்கள் துறைத் தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள், நாள் : 07.01.2025 தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் (Desktap Computers), மடிக்கணினிகள் (Laptops) மற்றும் ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள் (TABs) வழங்கப்பட்டு உள்ளன. 

மேலும் தமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும் (Smart Class Room) நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும் (High Tech Lalbs] தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் புதிய அறிவியல் நுட்ப பயன்பாடுகளின் வழியாக சிறந்த அனுபவங்களை மாணவர்கள் பெருமளவில் பெற்றிட முடியும். இத்தகைய கணினி சார்ந்த புதிய அறிவியல் நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைபுரியும் வகையில் மணற்கேணி செயலி வடிவமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது, பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் சார்ந்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் பெரிதும் ஈர்க்கப்படுகிறது. 1 

 (1யில் காணும் செயல்முறைகளில் தெரிளிக்கப்பட்டபடி விரைவு துலங்கல் குறியீடு (Quick Response Code - QR Code ) அனைத்து பள்ளிகளிலும் ஒட்டப்பட்டு உள்ளதா என்பதையும் அதன் வழியாக ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பாடப்பொருளுக்கு ஏற்றவாறு மாநில பாடத்திட்ட புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களுக்கான காணொலி காட்சிகளின் வீடியோக்களை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகின்றார்களா என்பதையும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வை/ஆய்வுகளின் போது உறுதி செய்திடல் வேண்டும். 

மேலும் எத்தனை பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதை 21.01.2025ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கண்டறிய வேண்டும். மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்யாத பள்ளிகள் ! ஆசிரியர்களை 23.012025ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும். பார்வை (2)யில் காணும் செயல்முறைகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் மாணவர்களின் பெற்றோர்களிடத்தில் மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஏற்படுத்திடவும் இச்செயலியை அக்கூட்டம் நடைபெறும் நாளன்றே அவர்களது நாளன்றே அவர்களது பெற்றோர்களின் கைபேசியில் Google Flay Store-யில் இருந்து பதிவிறக்கம் செய்து கொடுத்து அச்செயலி வழியாக பாட விவரங்களை எவ்வாறு மாணவர்கள் வீட்டில் பயன்படுத்தி கற்க முடியும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ள எண்ணிக்கை தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் சிறு பகுதியாகவே உள்ளது. 

அனைத்து பெற்றோர்கள் / மாணவர்களிடத்தில் இச்செயலி மூலமாக கற்றல் செயல்பாடு நடைபெறுவதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகளில் Desktop Computers, Laptops, TABs, Smart Board மற்றும் High Tech Labகளின் மூலம் கற்பித்தல் செயல்பாடு ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பணிபுரியும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கும் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்தோ அல்லது ,: https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள வழியோ காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்துள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கும் அதிகளவில் வித்தியாசம் உள்ளது.

 எனவே, ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது Mobile phone, Desktop Computers, Laptops, TABs, Smart Board மற்றும் High Tech Labயில் மணற்கேணி செயலி அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதளத்தில் காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்து வகுப்பறைக் கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும். மணற்கேணி செயலி மூலமாகவோ அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ கட்டணம் எதுவுமின்றி அனைவரும் எளிதில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்ய முடியும் (Open source and can be downloaded free) என்பதை ஆசிரியர்களுக்குத் தெரிவித்திடல் வேண்டும். மேலும் எத்தனை ஆசிரியர்கள் ! மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர்கள் காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் 2401.2025ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும். 

1 முதல் 8ஆம் வகுப்புக்குரிய காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்யாத ஆசிரியர்கள் / மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர்களுக்கு 31.01.2025ஆம் தேதிக்குள் மணற்கேணி செயலி மூலமாகவோ அல்லது https://manarkeni.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் (தொடக்கக் கல்வி) மேற்கொள்ள வேண்டும். 20.01.2025லிருந்து 25.01.2025ஆம் தேதிக்குள் கற்றல் செயல்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு முகாம்களை செயல்படுத்தி பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மணற்கேணி செயலி மற்றும் https://manarkeni.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் கட்டணம் எதுவுமின்றி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களுக்கான காணொலி காட்சிகளை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறித்த சிறந்த புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திடல் வேண்டும்.

 3  ஆசிரியர்களின் இத்தகைய புரிதலுக்குப் பின்னர் 27.01.2025 முதல் 31.01.2025ஆம் தேதிக்குள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மணற்கேணி செயலி குறித்த சிறந்த புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த பள்ளி அளவிலான பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஏற்பாடு செய்வதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகளை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். பார்வை (3)யில் காணும் செயல்முறைகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 120 காணொலிகளின் லிங்க் (இணைய இணைப்பு ) https://docs.google.com/spreadsheets/d/1VZ2KSOTpxlaxec06pq7LhqJHsxD- 3jgloCGICyObD38/edit?usp=sharing அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு அதனை பள்ளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் இடம்பெற்ற பாடங்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழி காணொலிகளை இணைப்பில் கண்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆசிரியர்கள் - மாணவர்கள் - பெற்றோர்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவிடவும் அவற்றை கற்றலில் பயன்படுத்திடவும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். கற்றல் செயல்பாட்டில் மாறி வரும் புதிய தொழில் நுட்ப சூழலுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தவும் அவர்களின் பெற்றோர்களை புதிய கற்றல் சூழலுக்கு உட்படுத்தவும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் நடைமுறை வாழ்வின் புதிய வரவுகளை ஏற்றுக் கொள்ளும் விழிப்புணர்வுடன் கூடிய சிறந்த புரிதலைக் கொண்டு பாட விவரங்களை அணுகுவதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள். 

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் கணினியுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடைடெறுவதையும் மணற்கேணி செயலி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் 

பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ள காணொலிகள் வகுப்பறை செயல்பாட்டில் தொடர்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அலுவலர்களாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்திடல் வேண்டும். அதற்கான அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) வழங்குவதோடு மணற்கேணி செயலி பயன்படுத்தும் ஆசிரியர்கள் - மாணவர்கள் - பெற்றோர்கள் ஆகிய பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகளவில் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.