'இரும்பின் தொன்மை'
நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் & கங்கைகொண்ட சோழபுரம்
அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினைத் தொடங்கி
வைத்தல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் "இரும்பின் தொன்மை
நூல் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் & கங்கைகொண்ட சோழபுரம்
அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினைத் தொடங்கி
வைத்தல்" போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் 23.01.2025 அன்று காலை 10.30 மணியளவில்
சென்னை,
அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல்
துறையானது, தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில்
அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அகழாய்வுகளின் வாயிலாக
கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சிவகங்கை
மாவட்டம், கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள்,
உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத்
தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில்
திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் (Open Air Museum) 4.48 ஏக்கர் பரப்பளவில்
ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட உள்ளது.
இக்கட்டுமானப் பணிகளை விரைவில்
தொடங்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இவ்விழாவில் கீழடி
திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழர்களின்
பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர� நேரடியாக வந்து
காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்டுகளிப்பதற்காக மெய்நிகர்
சுற்றுலா உருவாக்கப்பட்டு கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கீழடி
அருங்காட்சியகத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக்
கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் &ipiq
அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில்
கண்டு மகிழலாம்.
இந்த இணையதளம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி
வைக்கப்படவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 28:11.2022 அன்று
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் "மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச்
சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும்
தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும்,
மேலைநாடுகளுடனும்,
கீழைநாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்" என அறிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் இராஜேந்திர சோழனால்
(கி.பி.1012-1044) சோழர்களின் தலைநகரமாக நிறுவப்பட்டது.
இவ்வூரில் அரண்மனை
அமைந்திருந்ததாகக் கூறப்படும் மாளிகைமேடு அகழாய்வுத் தளத்தில் செங்கல்
கட்டுமானங்கள், கூரை ஓடுகள், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், செப்புக்
காசுகள், செலடன் மற்றும் போர்சலைன் வகை சீனப்பானை ஓடுகள் போன்ற பல்வேறு
தொல்பொருட்கள் தொடர் அகழாய்வுகளின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இங்குள்ள
கட்டுமான எச்சங்களும், கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் சோழர்களின் தலைநகரான
கங்கைகொண்ட சோழபுரத்தின் அரண்மனையின் அடித்தளத்தை உறு� மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் 'இரும்பின் தொன்மை' என்ற நூலினை வெளியிட்டு விழாப் பேருரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வு வலையொளி (youtube) மூலம் நேரலையில் ஒளிபரப்பு
(https://www.youtube.com/live/AOQVL83zj5s?si=PFAn7U 6xyyUOуSO) செய்யப்படவுள்ளது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 அரசின் செய்திகளை
உடனுக்குடன் தெரிந்துகொள்ள: Indiprnews tndiprtndipr TN DIPR www.dipr.tn.gov.in m
TNDIPR, Govt.of Tamil Nadu