கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம்

சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ.564.44 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1102.25 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.564.44 கோடி செலவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடம், நுழைவு வாயில் வளைவுகள், விருந்தினர் விடுதி மற்றும் 9 வளாகங்களையும், அதனைச் சார்ந்த 126 கட்டடங்களையும் திறந்து வைத்தார். 

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவச் சிகிச்சைகளை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. 

கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் 1102.25 ஏக்கர் நிலப்பரப்பில் 564.44 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.


 இந்த ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்தில், நிர்வாக அலுவலகம், விருந்தினர் மாளிகை மற்றும் நுழைவு வாயில், கால்நடை 2 பண்ணை வளாகத்தில் நாட்டின மாடுகள் பிரிவு, வெள்ளாடுகள் பிரிவு, செம்மறியாடுகள் பிரிவு. நாட்டு கோழியின பிரிவுகள், நவீனகுஞ்சு பொரிப்பகம், கோழித் தீவன உற்பத்தி ஆலை ஆகியவையும், மீன்வளர்ப்பு செயல்முறை வளாகத்தில் மறுசுழற்சி முறையில் தீவிர மீன்குஞ்சுகள் உற்பத்தி பிரிவு, அலங்கார மீன் வளர்ப்பு பிரிவு, மீன் கழிவுகளை பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் பிரிவு ஆகியவையும், நிர்வாகக் கட்டடம், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதியுடன் கூடிய முதுநிலை கல்வி மையம், விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகத்தில் நவீன பயிற்சி வளாகம், ஒருங்கிணைந்த மாதிரி கால்நடை பண்ணைகள், கால்நடை மருத்துவ அலுவலர்கள் விடுதி, பண்ணையாளர் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. 


மேலும், உயிர் தொழில்நுட்ப பிரிவுகள், கால்நடை இனப் பெருக்கம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுடன் கூடிய ஆராய்ச்சி வளாகம், தொழில் துவக்கம் மற்றும் ஒருங்கிணைந்த தகவல் மைய வளாகம், பசுந் தீவன ஆராய்ச்சி வளாகம், பொதுமக்கள் கலந்துரையாடும் பகுதி, இறைச்சிக்கூடம் மற்றும் பதப்படுத்துதல் வளாகம் ஆகிய வளாகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டமைப்பு பணிகள் நபார்டு தேசிய வேளாண் வளர்ச்சி வங்கி மூலம் 447.05 கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கென தேவையான கால்நடைகள். உபகரணங்கள், மருந்து பொருட்கள் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவற்றிற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சி நிலையத்திற்கென 28.50 கோடி ரூபாய் செலவில் 110/22 கி.வோ. துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.05.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் தேவைக்கான குடிநீரை வழங்க 262:16 கோடி ரூபாய் செலவில் சிறப்பு குடிநீர் வழங்கல் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து சேலம் மாவட்டம், கூடக்கல் கிராமத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு பல்வேறு நீரேற்று நிலையங்கள் மூலமாக 156 கி.மீ தூரத்திற்கு 

 3 குழாய்கள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சுமார் 70 உயர்தர நாட்டின பசுக்கள், 500-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள், 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நவீன இதன்மூலம், நாட்டின பசுக்கள், ஆடுகள், கோழி இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவதோடு, பண்ணையாளர்கள் தொழில்நுட்பங்களை அறிந்து கால்நடைகளின் உற்பத்தி திறனை பெருக்கி, குறைந்த செலவில் தரமான பால், முட்டை மற்றும் இறைச்சி பொருட்கள் உற்பத்தி செய்ய இயலும்.


 மேலும், கால்நடைப் பண்ணைகள் சார்ந்த தொழிலினை தொடங்க விழையும் தொழில் முனைவோருக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பயிற்சி பெற வாய்ப்புகள் அமையும். அத்துடன், ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஆண்டுதோறும் 3,000 இளைஞர்கள் பயிற்சி பெற்று சிறந்த ஏற்படுத்திகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. - வேலைவாய்ப்பினை இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரதா சாகு. இ.ஆ.ப., தலைவாசல் - கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் திரு. க. கிருஷ்ணகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

காணொலிக் காட்சி வாயிலாக சேலம் மாவட்டத்திலிருந்து மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. ஆர். ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.தே. மலையரசன், திரு.டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற [1:45 pm, 14/01/2025] Real Me: 4 உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மரு.பாரதி, சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர்.இளங்கோ, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.