கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் புதிய டவர் பிளாக் கட்டிடம் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கீழ்ப்பாக்கம் அரசு ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் புதிய டவர் பிளாக் கட்டிடம் ஆய்வு -மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் புதிய கட்டிடத்தினை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது 

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (29.01.2025) சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ள புதிய டவர் பிளாக் கட்டிடத்தினை ஆய்வு செய்தார்கள். பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்னை மக்களின் குறிப்பாக மத்திய சென்னை, வடசென்னை மக்களின் மிகப் பெரிய அளவிலான மருத்துவ சேவைக்கு ஆதாரமாக இருக்கும் மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனை அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தீக்காய சிகிச்சைகளுக்கும் பெயர் எடுத்த ஒரு மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏராளமாக செய்யப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு (சீமாங்) கட்டிடம் இம்மருத்துஏதேனும் நடைபெறவிருக்கிறது. எனவே மெட்ரோ நிர்வாகம் மருத்துவமனை என்பதால் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவர்கள் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டுகோள் விடுத்தார்கள். 

அந்தவகையில் உடனடியாக ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவு ஏறத்தாழ 200 படுக்கை வசதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அறுவை அரங்கங்கள், சீமாங் பிரிவுகள் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. வரும் காலங்களில் புதிய இடத்தில்தான் இந்த சிகிச்சை பிரிவுகள் இயங்கும். இந்தக் கட்டிடத்தைப் பொறுத்தவரை ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. 

ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்களும், ரூ.162.21 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் என்கின்ற வகையில் ரூ.362.87 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2,68,815 சதுர அடி பரப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள் 468 படுக்கை வசதிகள்,16 அறுவை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், அதில் ஒன்று Hybrid OT என்று சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த அறுவை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

JICA நிதி ஆதாரத்துடன் ஏற்கெனவே 7 இடங்களில் குறிப்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 3 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், ஆவடி, வேலம்பாளையம், அம்மாபேட்டை, கண்டியப்பேரி ஆகிய 4 இடங்களிலும் மருத்துவமனைகள் கட்டுவதற்கு ரூ.1,634 கோடி செலவில் பணிகள் நடைபெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பயன்பாட்டிற்கு வந்த: மாவட்ட தலைமை முதலமைச்சர் அவர்களிலான அரசுப் பொறுப்பேற்றபிறகு புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு மிக விரைவில் வர உள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் 6 தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவ கட்டமைப்புகளை கொண்ட மருத்துவமனைகள். இந்த 25 மருத்துவமனைகளுக்கு ரூ:1,018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 மாதம் காலங்களில் அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவுற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 

எங்கு விபத்துகள் நேர்ந்தாலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தாராபுரம் அரசு மருத்துவமனை, ரூ.20 கோடி செலவில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நிகராக வகையில் தாராபுரம் மற்றும் காங்கேயம் அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 என்கின்ற மகத்தான திட்டத்தை 2021 டிசம்பர் திங்கள் 18 ஆம் நாள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது. 

இதில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்கு அரசு சார்பில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாட்டில் 500 இடங்களில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் என கண்டறியப்பட்ட இடங்களில் அதனை ஒட்டி இருக்கின்ற 702 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல் ரூ.1 இலட் நோய்த்தொற்று பாதிப்புகள் நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு பருவமழை காலங்களில் நோய்த்தொற்றுகள் பரவுகின்றது என்பது இயற்கை. நோய்ப் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுக்காக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அண்டை மாநிலங்களில் ஏதாவது நோய் பாதிப்புகள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் வகையில் இருந்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு என்பது தமிழ்நாட்டில் வருவதற்குரிய வாய்ப்பில்லை. 

வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் பொது சுகாதாரத்துறை எடுத்து வருகிறது என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். அவர்கள் இந்நிகழ்வில் அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.மோகன், தேசிய நலவாழ்வு குழும் இயக்குநர் மரு.அருண் தம்புராஜ், இ.ஆ.ப., மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாஸ்கர், நிலைய மருத்துவ அலுவலர் மரு.வாணி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.முத்தமிழரசு, செயற்பொறியாளர்கள் திரு.கோவிந்தராஜலு, திரு.அழகிரிசாமி மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயரலுவலர்கள் உடனிருந்தனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.