ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ
ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதற்கு பதிலாக. அவர்களின் வேலை
காய்ப்புக்கான திறன்களை வளர்த்து பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில்
அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பணவுறுதி ஆவணம் (Skill Vouchers)
ரூ.12,000/-, ரூ.15,000/- மற்றும் ரூ.25,000/- என மூன்று பிரிவுகளின் கீழ்
வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை https://cms.tn.gov.in/cms.migrated/document/GO/adtw t 90ms2024.pdf மற்றும் https://cms.tn.gov.in/cms
migrated/document/GO/adtw t 5 ms 2025.pdf என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். தற்போது, பணவுறுதி ஆவணம் (Skill Vouchers) வழங்க உயர்திறன்
ஊக்கத் திட்டத்தினை 2024-2025-ஆம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான இணையவழி
விண்ணப்பம் 30.01.2025-இலிருந்து விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர்
https://ee.kobotoolbox.org/x/nMU1hMpg என்ற இணைப்பில் நேரடியாக 28.02.2025-க்குள்
விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேற்கண்ட விவரங்களை
மாணாக்கர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க,
அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக்
கொள்ளப்படுகின்றன.