மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
இன்று (24.2.2025) சென்னை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும்
குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய
திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி
வாயிலாக திறந்து வைத்தார். முன்னதாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர்
அவர்கள் சென்னை, தியாகராய நகர் பாண்டி பஜாரில், கூட்டுறவுத் துறை சார்பில்
அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு. அதன் விவரங்கள் குறித்து
கேட்டறிந்து, பொது மக்களுக்கு முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்துகளின் விற்பனையை
தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 அன்று
நிகழ்த்திய சுதந்திர தினவிழா உரையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும்
பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும்,
நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க
வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக பொது
மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில்
"முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர்
மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதை சிறப்பாக செயல்படுத்த
மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான
கடனுதவி அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க,
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள B.Pharm
/ D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும்
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள்
பெறப்பட்டு தொழில்முனைவோருக்கு தலா 3 இலட்சம்2 ரூபாய் மற்றும் கூட்டுறவுச்
சங்கங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள
ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்திற்கு
தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்
மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய
மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ்-இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு
நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக
சென்னை, சாலிகிராமத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் மத்திய மருந்து
கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு
நுகர்வோர் கூட்டுறவு இணையம், கொள்முதல் செய்து வழங்கும் மருந்துகள் அனைத்து
மாவட்டங்களிலும் இருப்பு வைக்க ஏதுவாக 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள்
அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருந்து கிடங்குகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான
குளிர்சாதன வசதி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி ஆகியவையுடன்
அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப மருந்துகள் உடனடியாக
அனுப்பும் வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான
மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து
முதல்வர் மருந்தகங்களுக்கு நகர்வு செய்ய தனியே வாகன வசதியும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளை கணினி
மூலம் ஆன்லைனில் மருந்தாளுநர்/தொழில்முனைவோர் கேட்பு பட்டியல் ஏற்படுத்த வசதி
செய்யப்பட்டுள்ளது. மருந்து தேவைப்பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில் மருந்துகளை
வாகனங்கள் மூலம் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் பெயர் பலகை பொருத்தி உட்கட்டமைப்பு
வசதிகளான குளிர்சாதன வசதி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள், கணினி மற்றும் பிரிண்டர்
ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில்
மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மருந்தக மென்பொருள் பயிற்சி. தமிழ்நாடு
மருத்துவப் பணிகள் கழகம் மூலம்3 மருந்தகங்கள் பராமரித்தல் குறித்த பயிற்சி, மருந்து
ஆய்வாளர்கள் மூலம் ஆவணங்கள் பராமரிப்பு பயிற்சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்
நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று களப்பயிற்சி உட்பட மூன்று
கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் நடத்தும் அனைத்து முதல்வர்
மருந்தகங்களுக்கும் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனிரிக் மருந்துகளை
மானியமாகவும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 1.50 இலட்சம் ரூபாய்
மதிப்புள்ள பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய
மருந்துகள் உட்பட இதர மருந்துகளையும் முதற்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால்
ஜெனிரிக் மருந்துகள் உட்பட அனைத்து வகையான மருந்துகளும் போதுமான அளவில் முதல்வர்
மருந்தகங்களில் இருப்பு பராமரிக்கப்படுகிறது. மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து
ஜெனிரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ்
மற்றும் இந்திய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் 1000 முதல்வர் மருந்தகங்களுக்கும்
அனுப்பப்பட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்யும்
வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர் சிறப்பாக
பணியாற்றிட அவர்களுக்கு தேவைப்படும் கடனுதவி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம்
அளிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம்
திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்முனைவோர் சார்பில்
500 மருந்தகங்களும், கூட்டுறவுத் துறை சார்பில் 500 மருந்தகங்களும், என மொத்தம்
1000 மருந்தங்கள் முதற்கட்டமாக செயல்படும். இதன்மூலம், B.Pharm/D.Pharm படித்த
பட்டதாரிகள் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்வர்
மருந்தகங்களில் பொதுமக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதன்மூலம்
தனியார் மருத்துவமனை /மருந்தகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு அதிக விலை கொடுத்து
வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த
விலையில் முதல்வர் மருந்தகங்களிலிருந்து வாங்கி பயன் பெற முடியும்.4 முதல்வர்
மருந்தகம் திறப்பு விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதல்வர்
மருந்தகங்கள் அமைத்திட பயனாளிகளுக்கு மூலதனக் கடன் மற்றும் முதல்வர்
மருந்தகத்திற்கான அரசு மானியம் வழங்கினார். மேலும், மூன்றாம் பாலினத்தினருக்கு
சிறகுகள் திட்டத்தின் கீழ் கடனுதவிகள், மல்லிகை பழங்குடியினர் மகளிர் சுயஉதவிக்
குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்
துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம்
மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை
மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி
தங்கபாண்டியன். சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி, திரு. அ. வெற்றியழகன்,
திரு. இ. பரந்தாமன், திரு. ஏ.எம்.வி. பிரபாகரராஜா, திரு. ஜோசப் சாமுவேல். திரு.
அரவிந்த் ரமேஷ். துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் திரு.நா.
முருகானந்தம், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச்
செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்
பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரத சாகு, இ.ஆ.ப., கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் கூடுதல்
பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) திரு. எஸ்.பி. அம்ரித், இ.ஆ.ப., உள்ளாட்சி
அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக்
காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற,
சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள். உள்ளாட்சி அமைப்புகளின்
பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்